வேட்டையன் முதல் வார வசூல் எப்படி இருக்கும்?.. விஜயதசமி டிக்கெட் புக்கிங் சூடு பிடிக்குதா?

சென்னை: பொன்னியின் செல்வன் 2, மிஷன் சாப்டர் 1, லால் சலாம், இந்தியன் 2 என வரிசையாக லைகா நிறுவன தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படங்கள் எல்லாம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில், ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் திருப்திப்படுத்தியுள்ளது.

ஆனால், வழக்கம் போல படத்தின் 2ம் பாதியில் சில குறைகள் உள்ளதை விமர்சகர்கள் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகின்றனர். விஜய் நடித்த கோட் படத்தை விட வேட்டையன் படம் கதை ரீதியாக சூப்பராகவே உள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

vettaiyan vettaiyan box office rajinikanth

ஆனால், வசூல் ஏரியா மற்றும் முதல் மற்றும் முதல் வாரத்திற்கான டிக்கெட் புக்கிங் விற்பனை விஷயத்தில் பார்த்தால் விஜய்யின் கோட் பக்கத்தில் கூட ரஜினிகாந்தின் வேட்டையன் வரவில்லை என்பதுதான் நிதர்சனமாக உள்ளது.

முதல் நாளே ஹவுஸ்ஃபுல் ஆகல: ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படமாவது தமிழ் சினிமாவுக்கு 1000 கோடி வசூலை கொண்டு வரும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமே மலைபோல் நம்பி வந்த நிலையில், முதல் நாளே வேட்டையன் படத்துக்கான டிக்கெட் புக்கிங் திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் ஃபுல் ஆகவில்லை. விஜய் நடித்த கோட் திரைப்படத்தின் புக்கிங் தொடங்கியதும் புக் மை ஷோ உள்ளிட்ட ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வெப்சைட்கள் கிராஷ் ஆகும் அளவுக்கு டிக்கெட் புக்கிங் அனல் பறந்தன. ஆனால், வேட்டையன் படம் முதல் நாளில் கூட டிக்கெட்டுகள் கிடைத்தன. 80 சதவீதம் காட்சிகள் மட்டுமே நிரம்பின என்றும் கூறுகின்றனர்.

vettaiyan vettaiyan box office rajinikanth

ஆயுத பூஜை, விஜயதசமிக்கும் பச்சை நிறம்: புக் மை ஷோ வெப்சைட்டில் இப்போ போய் பார்த்தால் கூட இன்றைய நாளுக்கான காட்சிகள் பல திரையரங்குகளில் பச்சை நிறத்தில் காட்சியளிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்துக்கே இந்த நிலைமையா? என சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

வேட்டையன் வசூலில் வெல்லுமா?: முதல் நாளே ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் உலகளவில் 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் வெறும் 30 கோடி வசூல் செய்த இந்த படம் ஓவர்சீஸில் 70 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேட்டையன் படத்தின் பட்ஜெட் 200 கோடிக்கும் குறைவாக உள்ள நிலையில், ஆயுத பூஜை, விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை என முதல் வாரத்திலேயே போட்ட காசை லைகா எடுத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மிகப்பெரிய வசூல் வேட்டையை வேட்டையன் நடத்த வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அதிகபட்சம் 300 கோடி வசூல் வரை வரும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X