வேட்டையன் எப்போ வருகிறார் தெரியுமா?.. ரஜினி ரசிகர்களுக்கு செம செய்தி
சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்தில் ஃபகத் பாசில், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து ஜெயிலர் படமும், கெஸ்ட் ரோலில் நடித்து லால் சலாம் படமும் கடைசியாக வெளியாகின. இவற்றில் ஜெயிலர் மெகா ஹிட்டானது. ஆனால் லால் சலாமோ வழுக்கி விழுந்துவிட்டது. இதற்கிடையே ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் ரஜினிகாந்த். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்துக்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஷூட்டிங் ஓவர்: வேட்டையன் படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி, மும்பை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துவந்தது. ரஜினிகாந்த்தும் முழு மூச்சுடன் அதில் நடித்துவந்தார். ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. நிச்சயம் இந்தப் படம் ரஜினிகாந்த்தின் கரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
டப்பிங் ஸ்டார்ட்: படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கின. ஃபகத் பாசில் உள்ளிட்டோர் தங்களுக்கான டப்பிங்கை பேசி முடித்தனர். அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்குநர் என்பதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதனை பார்க்கையில் இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாகவும் உருவாகியிருப்பது உறுதியானது.
வேட்டையன் ரிலீஸ்: படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெய் பீம் படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தவர் ஞானவேல் என்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் டைட்டில் டீசரும் நல்ல வரவேற்பையே பெற்றது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 10 ரிலீஸ்: அக்டோபர் மாதம் படம் ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் படம் எந்த தேதியில் ரிலீஸாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அன்றைய தினம் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா படம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











