Vettaiyan Teaser: எஸ்பி யாரு?.. ரஜினிகாந்துக்கு என்ன ரோல்.. வேட்டையன் டீசர் இப்படித்தான் இருக்குமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக காத்திருக்கிறது. ஆனால், ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வேட்டையன் டீசர் இருக்காது என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கபாலி படத்திற்கு பிறகு காலா திரைப்படம் பெரும் தோல்விப் படமாக மாறியது. அந்த படத்தைத் தொடர்ந்து தர்பார் மற்றும் அண்ணாத்த படங்களும் பெரிதாக ஓடவில்லை.

vettaiyan vettaiyan teaser rajinikanth


நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ஸ்லோமோ ஷாட்களை சரியாக பயன்படுத்தி மோகன்லால், சிவராஜ்குமாரை சரியான இடங்களில் கேமியோவாக கொண்டு வந்து நடத்திய மேஜிக் தான் அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறக் காரணம் என்கின்றனர்.

வேட்டையன் டீசர் எப்படி இருக்கும்?:
எஸ்பி யாரு? என அண்ணாத்த மற்றும் தர்பார் ஸ்டைலில் தான் வேட்டையன் படம் இருக்கும் என்றும் எல்லாரையும் போட்டு அடித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தை காட்டவுள்ளனர். போலீஸ்களின் உயர் அதிகாரியாக அமிதாப் பச்சன் இந்த படத்தில் நடித்துள்ளார். ஜெயிலர் படம் அளவுக்கு படு மாஸாக வேட்டையன் படம் இருக்குமா? என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர்.

இன்னொரு தர்பார்: வேட்டையன் படத்தின் டீசரை பார்த்த சிலர் அந்த படம் ஜெயிலர் படம் போல தாறுமாறாக இல்லை என்றும் இன்னொரு தர்பார் படம் போலத்தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர். இயக்குநர் ஞானவேல் ரஜினிகாந்தை வைத்து செம ஸ்பீடான ஸ்க்ரிப்ட்டையோ, மாஸ் காட்சிகளையோ வைக்காமல் ரொம்பவே ஸ்லோவாகத்தான் படத்தைக் கொண்டு செல்கிறார் என்றும் எஸ்பி ஏன் இப்படி மூர்க்கமாக அனைவரையும் போட்டு அடிக்கிறார். அவருக்கு என்ன ஆனது? என்பது தான் படத்தின் கதையாக இருக்கும் என தகவல்கள் கசிந்துள்ளன.

vettaiyan vettaiyan teaser rajinikanth


7 மணிக்கு தெரிந்து விடும்:
எப்படி இருந்தாலும் இன்று மாலை நடைபெறவுள்ள வேட்டையன் இசை வெளியீட்டு விழாவின் போது வேட்டையன் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிடப் போகின்றனர். அந்த டீசர் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

லைகாவுக்கு வெற்றி கிடைக்குமா?: ரஜினிகாந்த் கேமியோவாக நடித்த லால் சலாம் திரைப்படம் ரொம்பவே ஸ்லோவாக இருந்த நிலையில் தான் இந்த ஆண்டு வெளியான அந்த படம் பெரிய தோல்விப் படமாக மாறி லைகா நிறுவனத்துக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது. இந்தியன் 2 திரைப்படம் பல நூறு கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில், படத்தில் ஏகப்பட்ட பிழைகள் இருந்த நிலையில், லைகாவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை அந்த படம் உண்டாக்கியது. வேட்டையன் படத்தை பெருமளவில் லைகா நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த படம் எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது அக்டோபர் 10ம் தேதி தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X