வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!

சென்னை: ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து வேட்டையன் படமும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் அந்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கி வருகிறார்.

ஜெய்பீம் படத்தைப் போல தரமான படமாக வேட்டையன் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதேசமயம் ஜெயிலர் படத்தைப் போல மல்டி ஸ்டார் நடிகர்கள் நடிப்பதால் படம் படு மாஸாக பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinikanth s Vettaiyan total business targets 1100 crore details leaked

இந்நிலையில், வேட்டையன் படத்தின் வசூல் டார்கெட்டை தயாரிப்பு நிறுவனமான லைகா பெரிய அளவில் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்தின் வேட்டையன்: சந்திரமுகி படத்தில் வேட்டையனாக ரஜினிகாந்த் நடித்த நிலையில், வேட்டையன் என்றே இந்த படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பல வருடங்கள் கழித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடன் இணைந்து வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் வேட்டையன் படத்தில் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தை தொடர்ந்து அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

1100 கோடி டார்கெட்: லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படம் வரும் மே 12-ஆம் தேதியுடன் மொத்த படப்பிடிப்பும் முடிந்து அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று அக்டோபர் மாதம் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் தற்போது வேட்டையன் படத்தின் தியேட்டர் ரிலீஸ், ஓடிடி விற்பனை, சாட்டிலைட் விற்பனை, ஆடியோ ரைட்ஸ் உள்ளிட்டவற்றை சேர்த்து ஒட்டுமொத்தமாக 1100 கோடி பிசினஸை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

300 கோடி சம்பளம்: வேட்டையன் படத்துக்கு நடிகர் ரஜினிகாந்தின் சம்பளம் 150 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்திற்கு சுமார் 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்தடுத்து ரஜினிகாந்தின் சம்பளம் மற்றும் பட பிசினஸ் குறித்த ஹாட் அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X