Vettaiyan Trailer Review: வேட்டையன் டிரெய்லர் நல்லா இருக்கா? இல்லையா?.. அமைதியோ அமைதியான அனிருத்!
சென்னை: த. செ. ஞானவேல் படமா? அல்லது ரஜினிகாந்த் படமா? என்றே தெரியாத அளவுக்குத்தான் வேட்டையன் படத்தின் டிரெய்லர் ரொம்பவே சுமாராக உள்ளது. இதற்கு வேட்டையன் படத்தின் ப்ரிவ்யூ என வெளியான அந்த மினி டீசரே தரமாக இருந்தது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
என்கவுன்ட்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்துள்ள நிலையில், அதனை நியாப்படுத்தும் விதமாகவே படத்தின் திரைக்கதையை ஞானவேல் உருவாக்கியுள்ளார் என்பதையே டீசரை தொடர்ந்து வேட்டையன் டிரெய்லரும் உணர்த்துகிறது.

ஜெயிலர் படம் அளவுக்கு இந்த படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்குமா? என்பது சந்தேகம் தான் என படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்கள் கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனிருத்தின் அனல் பறக்கும் பிஜிஎம் பில்டப் எல்லாம் சுத்தமாக டிரெய்லரில் இல்லாமல் ரொம்பவே சுமாரான இசையுடன் டிரெய்லர் வெளியாகி இருப்பது ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.
வேட்டையன் டிரெய்லர் ரிலீஸ்: வரும் அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. லைகா தயாரிப்பில் இந்த ஆண்டு வெளியான லால் சலாம், மிஷன் சாப்டர் 1, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் வரிசையாக சொதப்பிய நிலையில், வேட்டையன் மற்றும் விடாமுயற்சி படங்களை தான் அந்த நிறுவனம் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது வேட்டையன் படத்தின் டிரெய்லர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகி உள்ளது.
கடுப்பான ரசிகர்கள்: திட்டமிட்டப்படி 5 மணிக்கு டிரெய்லர் வெளியாகாமல் லோடிங் என்கிற அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி விட்டார்கள். லைகா நிறுவனம் எதையுமே சொன்ன நேரத்தில் ரிலீஸ் செய்ய மாட்டார்கள் என திட்ட ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், டிரெய்லரை பார்த்த பின்னராவது ரஜினிகாந்த் ரசிகர்கள் ஹேப்பியாவார்கள் என்று பார்த்தால் ரஜினிகாந்த் ஹேட்டர்கள் கொண்டாடும் டிரெய்லரை தான் வெளியிட்டுள்ளனர் என கலாய்த்து வருகின்றனர்.
டிரெய்லர் எப்படி இருக்கு?: பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் நபர்களை சும்மா விடக் கூடாது என்றும் என்கவுன்ட்டர் செய்ய வேண்டும் என்றும் போலீஸுக்கு பிரஷர் ஏற்படுகிறது. ஒரு வாரம் எல்லாம் வேண்டாம் எண்ணி 3 நாளில் முடிச்சுடுறேன் என வேட்டையனாக ரஜினிகாந்த் அதிரடியாக என்ட்ரி கொடுக்கிறார். அந்த காட்சியில் இருந்து டிரெய்லர் கட்ஸ் மற்றும் அனிருத்தின் பிஜிஎம் பிக்கப் ஆகியிருந்தால் பரபரப்பாக இருந்திருக்கும். அதற்கு பதிலாக அநீதிக்கு எதிராக நீதி தான் இருக்க வேண்டும் என்றும் அநீதிக்கு எதிராக இன்னொரு அநீதி இருக்கக் கூடாது என அமிதாப் பச்சன் கிளாஸ் எடுக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன. ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் பேசி பேசியே வேட்டையன் படத்தை பார்க்கச் செல்லும் ரசிகர்களை கடுப்பாக்காமல் இருந்தால் சரி என்று தான் டிரெய்லரை பார்த்த பின்னர் எண்ண தோன்றுகிறது.
ஹைப்பை குறைக்க திட்டமா?: விஜய்யின் கோட் படத்திற்கு கடைசி நேரத்தில் அதிக ஹைப் கொடுத்து எகிற விட்டது தான் அந்த படத்திற்கு சிக்கல் ஏற்பட காரணம் என்பதால் வேட்டையன் படத்துக்கு கடைசி வரை ஹைப் ஏற்றாமல் தியேட்டரில் வந்து ஞானவேல் எடுத்திருக்கும் கதையை பார்க்கும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என நினைக்கிறாரா? என்று தெரியவில்லை. இதுவரை வெளியான பாடல்களிலேயே மனசிலாயோ பாடல் மட்டுமே ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. வரும் அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் படம் வெளியான பின்னராவது படம் ரசிகர்களை திருப்திப்படுத்தினால் தான் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்பது கன்ஃபார்ம்.


Click it and Unblock the Notifications











