Vettaiyan X Review: வேட்டையன் வெறித்தனம்.. கன்டென்ட்ல மாஸ் இல்லை.. மாஸ்ல தான் கன்டென்டே.. அடிபொலி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதியான இன்று ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகி தலைவர் ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. தியேட்டர்களில் காலை முதலே திருவிழாக்கோலம் காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் வேட்டையன் திரைப்படம் காலை 9 மணிக்கு முதல் காட்சியாக தொடங்குகிறது. அமெரிக்கா, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி போடப்பட்டுள்ள நிலையில், வேட்டையன் படத்தை காண நள்ளிரவே ரசிகர்கள் குவிந்து டிஜே மியூசிக் எல்லாம் வைத்து அலப்பறை செய்துள்ளனர்.

vettaiyan vettaiyan review rajinikanth

வேட்டையன் படத்தின் டீசர், டிரெய்லர் எல்லாம் ஓவர் ஹைப் கொடுக்காமல் இருந்து வந்த நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் கன்டென்ட்ல மாஸ் இல்லை.. மாஸ்ல தான் கன்டென்டே என்றும் தீபாவளி வரைக்கும் படம் வசூல் வேட்டையாடப் போவது உறுதி என பாசிட்டிவ் விமர்சனங்களை சோஷியல் மீடியாவில் கொடுத்து வருகின்றனர். நெட்டிசன்களின் ட்விட்டர் விமர்சனங்களை இங்கே காணலாம் வாங்க..

வேட்டையன் விமர்சனம்: வேட்டையன் திரைப்படத்தின் முதல் பாதி வேறலெவல் வெறித்தனம். பக்கா பிளாக்பஸ்டர் லோடிங் என இந்த நெட்டிசன் விமர்சனம் கொடுத்துள்ளார். கன்டென்ட்ல மாஸ் இல்லை.. மாஸ்ல தான் கன்டென்டே என்றும் முதல் 25 நிமிடங்கள் தலைவரோட காட்சிகள் அனைத்துமே கூஸ்பம்ப்ஸ் மொமண்ட் தான். அனிருத்தின் பிஜிஎம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. இந்த படம் பக்காவான கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது தான் சிறப்பான தரமான ட்விஸ்ட். இண்டஸ்ட்ரி ஹிட் லோடிங் என இந்த ரசிகர் படத்தை பாராட்டியுள்ளார்.

vettaiyan vettaiyan review rajinikanth

இடைவேளை வெறித்தனம்: வேட்டையன் படத்தின் இடைவேளை காட்சி பயங்கர ரேஸியாகவும் சிறந்த புலனாய்வு படமாகவும் அமைந்துள்ளது. ரஜினிகாந்தை தாண்டி இந்த படம் இயக்குநர் படமாக மாறியிருப்பது தான் படத்திற்கான பலம் என இந்த ரசிகர் பாசிட்டிவ் விமர்சனத்தை வைத்துள்ளார்.

vettaiyan vettaiyan review rajinikanth

ரொம்ப வொர்ஸ்ட்: இடைவேளை காட்சியின் போது "நாம செஞ்சது என்கவுன்ட்டரு இல்லை மர்டரு என வரும் வசனம் எல்லாம் ரொம்பவே க்ரிஞ்சாக உள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் மோசமான முதல் பாதியை கொண்ட படமாக வேட்டையன் உள்ளது. உங்க காசை வீணடிக்க வேண்டாம் என இந்த நெட்டிசன் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

vettaiyan vettaiyan review rajinikanth

அமெரிக்காவில் அதிகாலையிலேயே அமர்க்களம்: தலைவர் தரிசனத்தை காண அமெரிக்காவில் அதிகாலையிலேயே குழந்தைகள் பெண்கள் என ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வேட்டையன் படத்தை காண குவிந்துள்ளனர். உலகம் முழுவதும் சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்கள் உள்ள நிலையில், ஓவர்சீஸில் இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தான் ஒட்டிட்டு இருந்தீங்களா?: வேட்டையன் படத்தின் இடைவேளை காட்சியை தூள் படத்தில் வெயிட் லிப்டிங்கை பரவை முனியம்மா காலால் எட்டி உதைத்து இதைத்தான் ராத்திரி பூரா ஒட்டிட்டு இருந்தீங்களா எனக் கூறுவது போல படத்தை வச்சு செய்து வருகின்றனர். வேட்டையன் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விஜய் ரசிகர்கள், சூர்யா ரசிகர்களை தாண்டி ஜூனியர் என்டிஆர் ரசிகர்களும் ரஜினிகாந்த் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுக்க தொடங்கி விட்டனர். கூடிய சீக்கிரமே வேட்டையன் படத்தின் முழு விமர்சனம் வந்து விடும் காத்திருங்கள்.

vettaiyan vettaiyan review rajinikanth

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X