சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா ரஜினிகாந்த்?.. என்ன மைண்ட் செட்?.. மனைவி ஓபன் டாக்
சென்னை: ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களின் மீதும் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். கூலி படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் சினிமாவிலிருந்து ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவல் குறித்து அவரது மனைவி லதா விளக்கமளித்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த்துக்கு 75 வயது ஆகிறது. இந்த வயதிலும் அவர் சுறுசுறுப்பாக நடித்துவருகிறார். அந்தவகையில் அவர் கடைசியாக ஹீரோவாக வேட்டையன் படத்திலும், கெஸ்ட் ரோலில் லால் சலாம் படத்திலும் நடித்தார். இரண்டு படங்களில் வேட்டையன் சுமாரான வரவேற்பை பெற்றது. லால் சலாம் திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. இவ்விரண்டு படங்களுக்கும் முன்னதாக ரிலீஸான ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டானது.
லோகேஷ் இயக்கத்தில் கூலி: வேட்டையன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார். அதில் அவருடன் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஆமிர் கான், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக படத்தை தயாரித்திருக்கிறது. படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகும் என்ற அறிவிப்பும் வந்துவிட்டதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

பெரிய எதிர்பார்ப்பு: லோகேஷை பொறுத்தவரை அவர் கடைசியாக இயக்கிய லியோ திரைப்படம் தோல்வி பட லிஸ்ட்டில்தான் சேர்ந்தது. இதன் காரணமாக இந்தப் படத்தை ஹிட்டாக கொடுத்து தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அவர் இருக்கிறார். அதேபோல் கமல்ஹாசனை வைத்து அவர் இயக்கிய விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர். எனவே ரஜினியை வைத்து லோகி இயக்கும் கூலி படமும் அதே ரிசல்ட்டை பெறுமா என்ற பெரிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அபரிமிதமாகவே எழுந்துள்ளது.
ஜெயிலர் 2: இதற்கிடையே ஜெயிலர் படம் ரிலீஸாகி ஹிட்டானதிலிருந்தே அந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இப்போது அந்தப் படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இதில் ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் நடித்த பலரும் நடிக்கிறார்கள். முதல் பாகம் போலவே இந்தப் படத்தையும் மெகா ப்ளாக் பஸ்டராக கொடுக்க வேண்டும் என படக்குழு கடுமையாக உழைத்துவருகிறது. மேக்கிங் வீடியோவும் தரமாகவே இருந்து ரசிகர்களிடம் வரவேற்பை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
சினிமாவிலிருந்து ஓய்வு?: சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த்துக்கு 75 வயது ஆகிறது. எனவே ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு அவர் சினிமாவிலிருந்து ஓய்வு எடுக்கப்போகிறார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக தீயாக பரவிவருகிறது. மேலும் ரஜினியின் வயோதிகத்தை காரணம் காட்டி; இனி முழுக்க முழுக்க வீட்டில் ரெஸ்ட் எடுங்கள் என அவரது மகள்கள் கூறியதாகவும்; அதனை தட்ட முடியாமல் ரஜினியும் ஓகே சொல்லிவிட்டார் என்றும் தொடர்ந்து பேசப்படுகிறது.
லதா ரஜினிகாந்த்தின் விளக்கம்: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கமளித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரஜினி ஓய்வெடுக்கப்போவதாக தகவல் பரவிவருகிறது. ஆனால் அவர் ஜெயிலர் 2 படத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பார்" என்றார். லதாவின் இந்த விளக்கத்தை கேட்ட ரஜினியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைய ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











