Rajini Daughter - இரண்டு ஆண்களுடன் தனித்தீவில் ரஜினியின் மகள்.. அவரே சொன்ன பதிலை பாருங்க
சென்னை: Rajini Daughter (ரஜினி மகள் சௌந்தர்யா) தனித்தீவில் இரண்டு ஆண்களுடன் இருக்க ஆசையிருப்பதாக ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தெரிவித்திருக்கிறார்.
இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கிக்கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியாகியிருக்கிறது. இரண்டு படங்கள் வரிசையாக தோல்வி படங்களாக அமைந்ததை அடுத்து ஜெயிலர் வெளியானது. இதனால் இந்தப் படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் இருந்தது

ஜெயிலர் ரிலீஸ்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. ரஜினி நடிப்பில் அடுத்ததாக லால் சலாம் படம் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேலு இயக்கத்தில் தனது 170ஆவது படத்திலும்; லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 வது படத்திலும் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார்.
ரஜினி மகள்கள்: ரஜினிகாந்த்திற்கு மொத்தம் இரண்டு மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவர்களில் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். யாத்ரா லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்பு பிரிவில் முடிந்தது. இருந்தாலும் இரண்டு பேரும் இன்னமும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை. எனவே மீண்டும் அவர்கள் இணைவார்கள் என்று பலரால் கணிக்கப்பட்டுள்ளது. அதற்கான முயற்சியில் ரஜினிகாந்த் இறங்கியிருப்பதாகவும் தெரிகிறது.
இளைய மகள்: ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவும் சினிமாவில்தான் இருக்கிறார். அவர் ரஜினியை வைத்து மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் கோச்சடையான் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது அதனையடுத்து எந்த படமும் இயக்காமல் இருக்கிறார். இதற்கிடையே அவர் பல படங்களில் கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் பல படங்களுக்கும் அவரே கிராஃபிக்ஸ் டிசைனர்.
விவாகரத்து: அவர் கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு எழுந்ததால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து விசாகன் வணங்காமுடி என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். தற்போது அவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்தின் பழைய பேட்டி ஒன்று திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அதில் அவரிடம் தனித்தீவில் இரண்டு ஆண்களுடன் வசிக்க வேண்டும் என்றால் யாருடன் வசிப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், அப்படி நிலைமை ஏற்பட்டால் இயக்குநர் சங்கர் மற்றும் இயக்குநர் ராஜமௌலி ஆகியோருடன் தனித்தீவில் வசிப்பேன் என தெரிவித்திருக்கிறார்


Click it and Unblock the Notifications











