ரஜினி சொன்ன அந்த வார்த்தை.. தெறிக்கும் டிவிட்டர்.. ட்ரென்டிங்கில் டாப்! #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஷேர் செய்த ஹேஷ்டேக், ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது.

Recommended Video

Rajinikanth போட்ட Tweet! ரசிகர்கள் நெகிழ்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், பேருந்து நடத்துனராக இருந்து திரைத்துறைக்கு வந்தவர். பல்வேறு தடைக்கற்களை தாண்டி இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் திகழ்ந்து வருகிறார்.

45 ஆண்டுகள்

45 ஆண்டுகள்

நடிகர் ரஜினிகாந்த் இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். 168 வது படமாக அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் கால் பதித்து 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி நன்றி

ரஜினி நன்றி

இதனை முன்னிட்டு முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து நடிகர் ரஜினிகாந்தின் காமன் டிபியை வெளியிட்டு வருகின்றனர். திரைத்துறையினரும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய சினிமா பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவை வாழ்த்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று டிவிட்டரில் நன்றி தெரிவித்தார்.

இதயம் கனிந்த நன்றி

இதயம் கனிந்த நன்றி

அதில் என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி என கூறியிருந்தார்.
மேலும் #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டிருந்தார்.

ட்ரென்டிங்கில் டாப்

ட்ரென்டிங்கில் டாப்

இதனை தொடர்ந்து #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். இந்த ஹேஷ்டேக் தமிழ்நாடு ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது. இதேபோல் #45YearsOfRajinismCDP என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்ட்டாகி வருகிறது.

ஆடுவோம் பாடுவோம்

ஆடுவோம் பாடுவோம்

ரஜினியின் இந்த ஹேஷ்டேக் ஒரு மில்லியன் டிவிட்டுகளை கடந்துள்ளது. இதனையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்த பதிவிட்டுள்ள இந்த ரசிகர், 1M ட்வீட்டுகளை கடந்த தலைவரின் #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை ஹேஷ்டேக்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X