'அண்ணாத்த' ஷூட்டிங்.. செம ஸ்டைலாக ஐதராபாத் புறப்பட்ட ரஜினி.. வைரலாகும் போட்டோஸ்

By

சென்னை: அண்ணாத்த ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் இன்று ஐதராபாத் சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த் இப்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 168 வது படம்.

இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உட்பட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

இந்தப் படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம்சிட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்து விட்டது. மார்ச் மாதம் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட இருந்த நிலையில், கொரோனா பரவல் தீவிரமடைந்தது. இதனால், நாடு முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ்

அக்டோபர் மாதம் இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், கொரோனா தாக்கம் குறைந்த பின் ஷூட்டிங் செல்ல முடிவெடுக்கப்பட்டது. அதன்படி வரும் 15 ஆம் தேதி அண்ணாத்த ஷூட்டிங் தொடங்கப்படுவதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அதை சன் பிக்சர்ஸ் இன்று உறுதிப்படுத்தியது.

பிறந்த நாள்

பிறந்த நாள்

இயக்குனர் சிறுத்தை சிவா, ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன வீடியோவை வெளியிட்டு இந்த தகவலை வெளியிட்டிருந்தது சன் பிக்சர்ஸ். இந்நிலையில் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக, நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் இன்று ஐதராபாத் சென்றார்.

சோசியல் மீடியா

சோசியல் மீடியா

அவர் விமானத்தின் அருகில் நிற்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அங்கு ஜனவரி 10 ஆம் தேதிவரை படப்பிடிப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். வரும் 31 ஆம் தேதி அதுபற்றி அறிவிக்க இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X