»   »  அனைத்து தடைகளையும் தகர்த்து... 800 அரங்குகளில் ரஜினிமுருகன்!

அனைத்து தடைகளையும் தகர்த்து... 800 அரங்குகளில் ரஜினிமுருகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இரண்டு தினங்களுக்கு முன்புதான் ரஜினிமுருகன் பட வெளியீடு குறித்து நாளிதழ்களிலும் இணையதளங்களிலும் இறுதியான விளம்பரங்களை வெளியிட்டது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.

ஆனால் நேற்று காலையிலிருந்தே ரஜினிமுருகன் ரிலீசாகுமா என்ற பேச்சு மீண்டும் கிளம்பியது. காரணம் ஏதோ சட்டச் சிக்கல் என்றார்கள். வாட்ஸ்ஆப்பில் ஏக வியாக்கியானங்கள் வேறு.


இன்று மீண்டும் திருப்பதி பிரதர்ஸ் மீண்டும் பட ரிலீஸை உறுதி செய்துள்ளது.


Rajinimurugan to hit 800 screens on Jan 14

இதுகுறித்து இன்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா சார்பில் என் .லிங்குசாமி வழங்கும் திரைப்படம் ரஜினி முருகன். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , கீர்த்தி சுரேஷ் , சூரி , ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புரளிகளை பொய்யாக்கி, தடைகளை தகர்த்தெறிந்து ரஜினி முருகன் வருகிற ஜனவரி 14 தேதி மிக பிரம்மாண்டமான வெளியீடாக உலகமெங்கும் 800 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உறுதியாக வெளியாகிறது," என்று தெரிவித்துள்ளனர்.

English summary
​Against all odds #RajiniMurugan standing tall with grand worldwide Jan 14th release more than 800 theaters huge expectation grows.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil