ரஜினி பேர கேட்டா அதிருதில்ல.. பலகோடி தொகைக்கு விலை போன கூலி.. ஃபர்ஸ் டைம் ரெக்கார்டு!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் பிடிஎஸ் புகைப்படங்கள் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஜெயிலர் படத்தை விட கூலி படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. குறிப்பாக வசூலை வாரி குவிக்கும் என்றும் கூறப்படுகிறது. 1000 கோடி சொல்லி அடிக்கும் என எதிர்பார்த்த நிலையில், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே கூலி திரைப்படம் பல கோடி ரூபாய் லாபம் ஈடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம், லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்துடன் இணைவது உறுதியானது. ஜெயிலர் படம் 700 கோடி வசூல் சாதனை படைத்த நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்திற்கான கால்ஷீட்டையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் லாக் செய்தது. லோகேஷ் - ரஜினி கூட்டணியில் இப்படம் வெளியாகும் நிலையில் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதேபோன்று ரஜினிக்க இணையாக ஹீரோக்கள் இப்படத்தில் நடிப்பது கூடுதல் பலமே, பான் இண்டியா லெவலில் எடுக்கப்படும் படம் என்பதால் அதற்கேற்ற ஸ்டார் நடிகர்களும் இப்படத்தில் நடிக்க கமிட் ஆகினர்.

ஸ்டார் நடிகர்கள்: கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகர்ஜூனா, ஷோபின் ஷபீர், உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் சத்யராஜ் லொள்ளு பிடித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. 80களில் கமல், ரஜினி படங்களுக்கு வில்லனாக நடித்து படிப்படியாக ஹீரோவாக உயர்ந்தார். பின்பு கட்டப்பாவாக இந்தியா முழுக்க பிரபலம் அடைந்தார். அதேபோன்று நாகர்ஜூனா தெலுங்கு மட்டும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். உபேந்திரா சத்யம் படத்திற்கு பிறகு தமிழில் நடிக்கும் படமாக இது இருக்கிறது.

கேமியோ ரோலில் யார் தெரியுமா: நேற்று லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடினார். அப்போது கூலி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமீர்கான் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாட்டிற்கு நடனமாட பெரும் தொகையே வாங்கியுள்ளார். ரசிகர்களும் மிகப்பெரிய ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கோலிவுட்டில் தற்போது கூலி 1000 கோடி அடிக்கும் என்பது தான் பேச்சு. லோகேஷ் கனகராஜ் பிரமாதப்படுத்தியுள்ளாராம். ரஜினியை திருப்தி படுத்தும் விதமாக படம் இருக்கிறதாம். அனிருத்தின் இசைக்கோர்ப்பு பணி முடிந்து விட்டதால் படம் ரிலீஸ் குறித்த செய்தி விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
120 கோடியா!: ரஜினி நடித்த படங்களிலேயே கூலி படத்திற்கான தியேட்டரிக்கள் ரிலீஸை தாண்டி ஒடிடி தளங்கள் இப்படத்தை வாங்க போட்டி போட்டுள்ளன. ஆனால், அமேசான் பிரைம் கூலி படத்தை தட்டி தூக்கியுள்ளதாம். அமேசான் ஓடிடி தளம் சுமார் ரூ.120 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ரஜினி நடித்த படங்களிலேயே கூலி படம் தான் அதிக தொகைக்கு டிஜிட்டல் விற்பனைக்கு சென்றுள்ளதாம். மிகப்பெரிய தொகைக்கு போனதால் சன்பிக்சர்ஸ் நிறுவனம் செம ஹேப்பியாம். சல்மான் நடித்த சிக்கந்தர் திரைப்படம் 165 கோடிக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











