தலைவர் வறாரு வழிவிடு.. ஜெயிலர் 2 மாஸ் அப்டேட் கொடுக்கும் சன் பிக்சர்ஸ்.. திருவிழாவுக்கு ரெடியா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படம் ஜெயிலர். இந்த படத்தின் அடுத்த பாகம் ஜெயிலர் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் ரிலீஸ்க்கு தயாராக உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதாவது ஜூலை 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு படத்தின் மாஸ் அப்டேட்டை படக்குழு வெளியிடவுள்ளது. அது படத்தின் ரிலீஸ் தேதியா? இல்லை முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பா? இல்லை படத்தின் மொத்த பணிகளும் முடிந்துவிட்டது என்பது தொடர்பான அறிவிப்பா என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைவாழ்க்கையில் பெரிய வசூலை ஈட்டித்தரும் என்று பேச்சுக்கள் கடந்த ஒரு ஆண்டாகவே திரை உலகில் அடிபட்டு வருகிறது.

முதல் ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்ததோடு, உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இதனால் சூப்பர் ஸ்டார், இயக்குநர், இசையமைப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு கார்கள் வழங்கி வெற்றியைக் கொண்டாடினார் கலாநிதி மாறன். இது மட்டும் இல்லாமல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யவும் நிதி உதவி வழங்கினர்.
இந்நிலையில் முதல் பாகத்தின் வெற்றியை விட இன்னும் பிரம்மாண்டமான அனுபவத்தை ஜெயிலர் 2 வழங்கும் வகையில் நெல்சன் திலீப்குமார் திரைக்கதையை வடிவமைத்துள்ளதாகவும், ஆக்ஷன், மாஸ் மற்றும் ரசிகர்களுக்கான சர்ப்ரைஸ் அம்சங்கள் அதிக அளவில் இடம்பெற்றிருப்பதாகவும் திரையுலகில் ஏற்கனவே தகவல்கள் பரவி வருகின்றன.
கடந்த ஒரு ஆண்டாகவே ஜெயிலர் 2, ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் புதிய வசூல் சாதனையை படைக்கும் திரைப்படமாக அமையும் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரங்களில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்திய அளவில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு சந்தையிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுவதால், முதல் பாகத்தின் சாதனைகளை முறியடிக்கும் திறன் ஜெயிலர் 2-க்கு இருப்பதாக ரசிகர்களும் திரையுலகினரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். படத்தின் ரிலீஸ் தேதியை சொல்லுங்க பாஸ் திருவிழாவுக்கு தயார் ஆகனும் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications