தெலுங்கில் அறிமுகமாகும் கர்ணன் பட நடிகை.. ஹீரோ யார் தெரியுமா!
சென்னை : மாரி செல்வராஜ் தனுஷ் கூட்டணியில் சமீபத்தில் வெளியான கர்ணன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
தற்போது கார்த்திக்கு ஜோடியாக சர்தார் மற்றும் கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் இயக்கத்தில் என அடுத்தடுத்து தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி மாஸ் நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி
பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாக இருந்த நடிகை ரஜிஷா விஜயன் அனுராக கரிக்கியின் வெல்லம் என்ற படத்தில் நடித்து மலையாளத்தில் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜார்ஜ் குட்டன்ஸ் பூரனம், ஒரு சினிமாக்காரன், ஜூன், பைனல்ஸ் , ஸ்டாண்ட் அப், லவ் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.

பேவரைட் கதாநாயகி
இதை தொடர்ந்து தமிழிலும் அறிமுகமான ரஜிஷா தனுஷ் மற்றும் மரி செல்வராஜ் கூட்டணியில் சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும் பெற்று மாபெரும் வெற்றி கண்ட கர்ணன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு முதல் படத்திலேயே ரசிகர்களின் பேவரைட் கதாநாயகி ஆனார். தற்போது கொகோ விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் கொகோ திரைப்படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தமிழிலும் அறிமுகமான ரஜிஷா தனுஷ் மற்றும் மரி செல்வராஜ் கூட்டணியில் சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும் பெற்று மாபெரும் வெற்றி கண்ட கர்ணன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு முதல் படத்திலேயே ரசிகர்களின் பேவரைட் கதாநாயகி ஆனார். தற்போது கொகோ விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் கொகோ திரைப்படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்து வருகிறார்.

ஒப்பந்தம்
தமிழில் நடித்த கர்ணன் மாபெரும் வரவேற்பை பெற்றிருப்பதை தொடர்ந்து தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்க அதில் கார்த்திக்கு ஜோடியாக சர்க்கார் திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க இதில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டது. திரில்லர் கலந்த ஆக்ஷன் திரைப் படமாக இது உருவாகி வருகிறது. எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார்.

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக
இவ்வாறு மலையாளம் மற்றும் தமிழில் கலக்கிக் கொண்டிருக்கும் ரஜிஷாவை தற்போது தெலுங்கு திரையுலகம் கொத்தாக தூக்கிக் கொண்டது. அதன் அடிப்படையில் தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா ரவிதேஜா, இயக்குனர் சரத் மண்டவா கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் ரஜிஷா ஹீரோயினாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார். கர்ணன் படத்திற்கு பிறகு பல பட வாய்ப்புகள் ரஜிஷாக்கு குவிந்து வர தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக மாறி வருகிறார்.


Click it and Unblock the Notifications











