கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்.. விஜய் சேதுபதி ஜோடி ஆகிறார் தனுஷ் ஹீரோயின்!

By

சென்னை: முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில், தனுஷ் பட நடிகை ஹீரோயினாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்போது பயோபிக் படங்கள் எடுக்கப்படுவது டிரெண்டாகி வருகிறது. அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள் பற்றிய கதைகளை எடுத்து வருகின்றனர்.

இந்தப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அதை எடுப்பதற்கு தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மித்தாலி ராஜ்

மித்தாலி ராஜ்

கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, தடகள வீரர் மில்காசிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரின் வாழ்க்கை கதைகள் சினிமாவானது. இந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. பேட்மின்டன் வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து கதைகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது. இதில் டாப்ஸி நடிக்கிறார். இதற்க்கு சபாஷ் மித்து என்று டைட்டில் வைத்துள்ளனர்.

முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன்

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையும் சினிமாவாக இருக்கிறது. 'கனிமொழி' படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இதை இயக்குகிறார். முத்தையா முரளிதரனாக, நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

800 விக்கெட் வீழ்த்தியவர்

800 விக்கெட் வீழ்த்தியவர்

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததை அடுத்து இதன் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளராக சாம் சி.எஸ் பணிபுரிய இருக்கிறார். இதுபற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களை வீழ்த்தியவர் என்பதால், அவர் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு 800 என்றே டைட்டில் வைத்துள்ளனர்.

நடிகை ரஜிஷா விஜயன்

நடிகை ரஜிஷா விஜயன்

லாக்டவுன் முடிந்த பிறகு இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே முத்தையா முரளிதரனின் மனைவி மதிமலராக நடிக்க மலையாள நடிகை ரஜிஷா விஜயனிடம் பேசி வருகின்றனர். இவர் தனுஷூடன் இப்போது கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். மலையாள நடிகையான ரஜிஷா, ஜார்ஜேட்டன் பூரன், ஒரு சினிமாகாரன், ஜூன், பைனல்ஸ், ஸ்டாண்ட் அப் உட்பட சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களும் நடித்துள்ளார்.

யாதும் ஊரே

யாதும் ஊரே

நடிகர் விஜய் சேதுபதி இப்போது ஜனநாதன் இயக்கத்தில் 'லாபம்' படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. இதன் டப்பிங்கில் சமீபத்தில் பங்கேற்றார். அடுத்து வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்திலும் 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துவருகிறார். இந்தப் படங்களை முடித்துவிட்டு, '800' படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X