லாக்டவுனுக்குப் பிறகு.. தியேட்டரில் ரிலீஸாகும் முதல் இந்திய படம் இதுதான்.. தனுஷ் ஹீரோயின் குஷி!
கொச்சி: லாக்டவுனுக்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் முதல் இந்திய திரைபடம், லவ். இதில் தனுஷின் கர்ணன் நாயகி ஹீரோயினாக நடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்த உயிர்கொல்லி வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.

ஊரடங்கில் தளர்வுகள்
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இப்போது அந்த ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

தியேட்டர்கள்
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 50 சதவிகித இருக்கைகளுடன் வரும் 15 ஆம் தேதி தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் சில மாநிலங்கள், இப்போது தியேட்டர்களை திறக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.

ரஜிஷா விஜயன்
ஏழு மாதங்களுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ரசிகர்கள் வருவார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. இந்நிலையில், கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் முதல் இந்திய படமாக, ரஜிஷா விஜயன் நடித்துள்ள 'லவ்' இடம்பெறுகிறது.

முதல் இந்திய படம்
இந்தப் படத்தில் அவருடன் ஷைன் டோம் சாக்கோ உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை காலித் ரஹ்மான் எழுதி இயக்கி உள்ளார். கொரோனா லாக்டவுனால் படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் லாக்டவுனுக்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் முதல் இந்திய படமாக மாறி இருக்கிறது.

வளைகுடா நாடுகள்
இந்தப் படம் துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வரும் 15 ஆம் தேதி வெளியாகிறது. இதுபற்றிய போஸ்டரை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ரஜிஷா விஜயன். அதில், லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டரில் வெளியாகும் முதல் இந்திய படம், நான் நடித்துள்ள 'லவ்'. வரும் 15 ஆம் தேதி வளைகுடா நாடுகளில் வெளியாகிறது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











