இது 2 வது ஸ்போர்ட்ஸ் படம்.. கோ கோ விளையாட்டை மையப்படுத்திய கதையில் தனுஷ் ஹீரோயின்!
சென்னை: கோ கோ விளையாட்டை மையப்படுத்திய படத்தில் தனுஷ் பட ஹீரோயின் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன். ஜார்ஜேட்டன் பூரன், ஒரு சினிமாகாரன், ஜூன், பைனல்ஸ், ஸ்டாண்ட் அப் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
டிவி நிகழ்ச்சிகளிலும் சீரியல்களும் நடித்துள்ள இவர், தமிழில் தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார்.

திருநெல்வேலி ஷூட்டிங்
தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில், இவர்தான் ஹீரோயின். இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு, தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயண் இசை அமைக்கிறார். திருநெல்வேலியில் வேகமாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு, லாக்டவுன் காரணமாகத் தடைபட்டுள்ளது.

முரளிதரன் மனைவி
இதையடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சினிமாவாக இருக்கிறது. 'கனிமொழி' படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இதை இயக்குகிறார். முத்தையா முரளிதரனாக, நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதில் முரளிதரன் மனைவியாக நடிக்க ரஷிஜாவிடம் பேசிவருவதாகக் கூறப்பட்டது.

பாரம்பரிய விளையாட்டு
இந்தநிலையில், இவர் இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கோ கோவை மையப்படுத்தி உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தில் அவர் கோ கோ வீராங்கனையாக நடிக்கிறார். இதற்காக அவர் பயிற்சி பெற இருக்கிறார். இந்தப் படத்தை, ஒட்டமுரி வெளிச்சம், தாகினி ஆகிய படங்களை இயக்கிய ராகுல் ரிஜி நாயர் என்பவர் இயக்குகிறார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்
நடிகர் மோகன்லால் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பாக 'பைனல்ஸ்' என்கிற படத்தில் சைக்கிள் பந்தய வீராங்கனையாக ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். இதில் சுராஜ் வெஞ்சரமூடு, மணியன் பிள்ளை ராஜூ, மாலா பார்வதி உள்பட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











