ராஜீவ் மேனனின் கேமரா ஒர்க் அப்படி.. அதெல்லாம் ஏஐ பொண்ணுங்க இல்ல பாஸ்.. KH x RK மேக்கிங் வீடியோ!

சென்னை: கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்க உருவாகவுள்ள அந்த் படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது. ஆனால், அதை பார்த்த பலரும் என்ன நெல்சன் இப்படி கஞ்சத்தனமாக ஏஐ பொண்ணுங்கள வச்சி வீடியோ எடிட் செய்து விட்டாரே என கலாய்த்தனர்.

இந்நிலையில், அதெல்லாம் ஏஐ பொண்ணுங்க இல்ல பாஸ் பக்கா ஃபாரீன் இறக்குமதி என அனைவருக்கும் அறிவிக்கும்படி மேக்கிங் வீடியோவை இறக்கி தேவையற்ற ட்ரோல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

Rajiv Menon Cinematography gives topnotch experience for Kamal Haasan and Rajinikanth intro promo video
Photo Credit:

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்கு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் தான் தரம் அப்படி ஏஐ கணக்கான டாப் நாட்ச்சில் உள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி - கமல் கூட்டணி: விஜய் - அஜித் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்கிற ஒரே ஒரு படத்தில் அவர்கள் டாப் நடிகர்களாக மாறுவதற்கு முன்பாக நடித்துள்ளனர். விஜய் மற்றும் சூர்யா இணைந்து நேருக்கு நேர் மற்றும் பிரெண்ட்ஸ் உள்ளிட்ட 2 படங்களில் நடித்துள்ளனர். ஆனால், ரஜினிகாந்த் மற்றும் கமல் இணைந்து அபூர்வ ராகங்கள், அவர்கள், பதினாறு வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தில்லு முல்லு, அலாவுதீனும் அற்புத விளக்கும் இந்தியில் ஜெராஃப்டர் என ஏகப்பட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் பிரிந்து நடிக்க முடிவு செய்து ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்த நிலையில், பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்கவுள்ளனர்.

Rajiv Menon Cinematography gives topnotch experience for Kamal Haasan and Rajinikanth intro promo video
Photo Credit:

மேக்கிங் வீடியோ வெளியானது: நெல்சன் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான நிலையில், பலரும் ரஜினிகாந்த், கமல்ஹாசனை தவிர அனைத்தும் ஏஐ என ட்ரோல் செய்த நிலையில், அது அனைத்துமே நிஜம் தான் என்றும் ஏஐ கிடையாது என்பதை நிரூபிக்கும் விதமாக மேக்கிங் வீடியோவை வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளனர். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் கைகுலுக்கி, ஆரத் தழுவிக் கொள்ளும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை புல்லரிக்க வைக்கிறது.

ராஜீவ் மேனன் ஒர்க் அப்படி: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய், குரு மற்றும் கடல் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் தான் ராஜீவ் மேனன். பிரபுதேவா, அரவிந்த் சாமி, கஜோல் நடித்த மின்சார கனவு படம் எல்லாம் அந்த காலத்துலயே அப்படியொரு ஃபிரேம் ஒர்க்கில் ஜொலிக்கும். மம்மூட்டி, அஜித் குமார், ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களை வைத்து அவர் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் இன்னமும் பலரது ஃபேவரைட். வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நடித்த ராஜீவ் மேனன் தற்போது கமல்ஹாசன், ரஜினி நடிக்கும் படத்திற்கு ஒளிப்பதிவாளராக மாறியுள்ள நிலையில், ஹாலிவுட் தரத்தில் அவரது ஒர்க் இருக்கிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X