விடுதலை 2 பாசிட்டிவ்தான்.. ஆனாலும் ஒரு சந்தேகம்.. மனம் திறந்த ராஜீவ் மேனன்
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் கடந்த 20ஆம் தேதி வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. இருந்தாலும் படத்தில் நடித்தவர்களின் நடிப்பும், வெற்றிமாறனின் மேக்கிங்கும் அட்டகாசமாக இருந்தது என்று ரசிகர்களிடம் இன்னொரு கருத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அப்ளாஸ் அள்ளிய நடிகரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் படம் குறித்து பேசியிருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் முடிவிலேயே இரண்டாம் பாகத்துக்கான லீடை வைத்திருப்பார் வெற்றி. விடுதலை 2 ஷூட்டிங்கை நீண்ட நாட்கள் நடத்தினார் அவர். இதில் கூடுதலாக மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்தப் படமானது கடந்த 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களும் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றார்கள்.

சுமார் ரகம்தான்: படத்தின் ஓபனிங்கிலேயே அட்டகாசமான சண்டையை வைத்து தொடங்கிய வெற்றிமாறன் போகப்போக வசனங்களால் மட்டுமே திரைக்கதையை நகர்த்தி சென்றது ஒருகட்டத்துக்கு மேல் போர் அடித்துவிட்டதாக ரசிகர்கள் கூறினார்கள். அதேசமயம் திராவிட சித்தாந்தம், கம்யூனிஸ சித்தாந்தம் உள்ளிட்டவைகளை அவர் தைரியமாக பேசியது பாராட்டத்தக்க ஒன்று என்று பலரும் கூறுகிறார்கள். சூழல் இப்படி இருக்க படத்தில் நடித்த இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் படம் குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
ராஜீவ் மேனன் பேட்டி: தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஒருமுறை சினிமா கல்லூரியில் ஒரு டிஸ்கஷன் இருந்தது. அப்போதுதான் நான் வெற்றிமாறனை முதன்முறையாக பார்த்தேன். அப்போதுதான் அவரது இயக்கத்தில் விசாரணை படம் ரிலீஸாகியிருந்தது. அதற்கு பிறகு எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பிறகு வெற்றிமாறன் என்னிடம் விடுதலை படம் பற்றி பேசி பேசியே அந்தப் படத்துக்குள் என்னை கொண்டு வந்துவிட்டார். அரசியல்வாதி குறித்துதான் சினிமாக்களில் நாம் பார்த்திருப்போம். ஆனால் ஒரு அரசு எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்கவில்லை.
அதுதான் காரணம்: அதனால்தான் இந்தத் தலைமை செயலாளர் கேரக்டரை செய்யலாம் என்று ஒத்துக்கொண்டேன். ஷூட்டிங்கிற்கு போகும்போது எனக்கு கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருந்தது. ஒரு வழியாக நடித்துவிட்டேன். இனிமேலும் நான் சினிமாக்களில் நடிப்பேனா என்றெல்லாம் எனக்கு தெரியாது. இந்த கேரக்டர் எனக்கு செட் ஆகும் என்று நினைத்தேன். அதன் காரணமாக நடித்தேன். நடிக்க முயற்சி செய்தேன். ஆனால் நான் ஒன்றும் பக்காவான நடிகன் கிடையாது என்பதுதான் உண்மை.
ஆச்சரியம்தான்: விடுதலை 2 படத்துக்கு சென்சார் போர்டு பெரிதாக எந்தப் பிரச்னையும் செய்யவில்லை. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் மியூட் போட சொன்னார்கள். விடுதலை 2 படத்தின் கதை எல்லாம் இந்த மாதிரியான காலகட்டத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிகிறது என்றால் அது ரொம்பவே பாசிட்டிவ்வான விஷயம் என்று நினைக்கிறேன். அதேபோல் இந்தப் படத்தை சென்சார் போர்டு எப்படி விட்டார்கள் என்பது எனக்கு இன்னமும் சந்தேகமாகத்தான் இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











