அமரன் படத்தால் வந்த பிரச்னை.. மன்னிப்பு கேட்ட கமலின் நிறுவனம்.. பஞ்சாயத்து முடிந்ததோ?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியானது அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 350 கோடி ரூபாய்வரை படம் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படம்தான் கடந்த மாதம் முழுக்க டாக் ஆஃப் கோலிவுட்டாக இருந்தது. மேஜர் முகுந்த் வரதராஜன் தீவிரவாதிகளுடனான சண்டையின்போது வீர மரணம் அடைந்தார். அதனை அடிப்படையாக வைத்து படம் உருவானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த அந்தப் படத்தில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், இந்து ரெபெக்கா வர்கீஸாக சாய் பல்லவியும் நடித்திருந்தார்கள். கமல் ஹாசன் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

செம ரெஸ்பான்ஸ்: அமரனுக்கு முன்பாக எஸ்கே நடிப்பில் வெளியான அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டடித்திருந்தன. எனவே அதே ஃபார்ம் இந்தப் படத்திலும் தொடருமா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருந்தார்கள். அவர்களுடைய ஆசைப்படியே அமரன் திரைப்படம் பயங்கரமான ரெஸ்பான்ஸை பெற்றது. மேக்கிங், பின்னணி இசை, பாடல்கள், நடிகர்களின் நடிப்பு என அனைத்து ஏரியாக்களிலும் படம் சிக்ஸர் அடித்திருந்தது.
மாஸ் சிவா, க்ளாஸ் சாய் பல்லவி: படத்தின் இரண்டு தூண்களாக இருந்தது சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும். ஆக்ஷன் காட்சிகள் சிவகார்த்திகேயன் மாஸாக ஃபெர்பார்ம் செய்திருந்தார். அதேபோல் காதல் காட்சிகளிலும் சாய் பல்லவி க்ளாஸாக ஸ்கோர் செய்திருந்தார். இருவருக்குமே இந்தப் படம் மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. மேலும் இரண்டு பேரின் கரியரும் அமரனுக்கு முன், அமரனுக்கு பின் என்று இனி சொல்லப்படும் என ரசிகர்களும், திரைத்துறையினரும் கூறிவருகிறார்கள்.
ஓடிடியில் ரிலீஸ்; தியேட்டரில் படம் மாஸ் ரெஸ்பான்ஸை பெற்றது. குறிப்பாக 350 கோடி வரை படமானது வசூல் செய்தது. இதனால் கோலிவுட்டின் மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதுமட்டுமின்று அடுத்த படங்களுக்கு தனது சம்பளத்தையும் அவர் உயர்த்தியிருக்கிறாராம். சூழல் இப்படி இருக்க அமரன் திரைப்படம் நேற்று முதல் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமாகிறது. திரையரங்கில் எப்படி சூப்பர் வரவேற்பை படம் பெற்றதோ அதேபோல் ஓடிடியிலும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுவருகிறது.
வந்த பிரச்னை: இதற்கிடையே படத்தின் ஒரு காட்சியால் பிரச்னை ஒன்று வெடித்தது. அதாவது படத்தில் சாய் பல்லவி தன்னுடைய தொலைபேசி எண் என்று சொல்லி ஒரு எண்ணை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பார். அந்த எண் வாகீசன் என்ற இளைஞருடையது. அந்த எண் படத்தில் இடம்பெற்றதைத் தொடர்ந்து அதுதான் சாய் பல்லவியின் எண் என்று நினைத்து அவ்வளவு அழைப்புகள் அந்த எண்ணுக்கு சென்றன. இதனால் பெரும் இம்சைக்கு ஆளான வாகீசன், '1.1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருந்தார்.
மன்னிப்பு கேட்ட நிறுவனம்: இந்த விஷயமும் கவனம் பெற்றது. மேலும் பட தயாரிப்பு நிறுவனம் வாகீசன் கேட்ட தொகையை கொடுக்குமா; எப்படி இந்தப் பிரச்னையை சமாளிக்கப்போகிறது என்று பலத்த எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்நிலையில் வாகீசனிடம் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் அவரது எண்ணை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











