புனித பயணத்தில் உயிரிழந்த மகன்.. மெக்காவில் இறுதிச்சடங்கு முடிந்து சென்னை திரும்பினார் ராஜ்கபூர்

By

சென்னை: மரணமடைந்த தனது மகன் உடல் மெக்காவில் அடக்கம் செய்யப்பட்டதை அடுத்து சென்னைத் திரும்பியுள்ளார், நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூர்.

நடிகர் பிரபு நடித்த 'தாலாட்டு கேக்குதம்மா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்

ராஜ்கபூர். அஜித் நடித்த அவள் வருவாளா, ஆனந்தப் பூங்காற்றே படங்களையும் இயக்கியுள்ளார்

உத்தமராசா, என்ன விலை அழகே, சமஸ்தானம் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய அவர் கடைசியாக வம்பு சண்டை படத்தை இயக்கி இருந்தார்.

வில்லனாக

வில்லனாக

தாஜ்மகால், ஏழையின் சிரிப்பில், மாயி, தென்னவன், அய்யா, ஆறு, அரண்மனை 2, வாகா, மாயாண்டி குடும்பத்தார் உட்பட பல்வேறு படங்களில் வில்லனாகவும் நடித்துள்ள ராஜ்கபூர், சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு ஷஜீலா கபூர் என்ற மனைவியும் ஷமீமா, ஷானியா என இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது ஒரே மகன் ஷாருக் கபூர்.

புனித பயணம்

புனித பயணம்

ராஜ்கபூரின் மனைவியும் அவரது மகன் ஷாருக்கபூரும் கடந்த சில நாட்களுக்கு முன் மெக்காவுக்கு புனித பயணம் சென்றனர். மெக்காவில் கடுமையான குளிர் நிலவியது. ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்னை உள்ள ஷாருக்கிற்கு குளிர் காரணமாக, உடல் நிலை மோசமானது. உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

உயிரிழந்தார்

உயிரிழந்தார்

இதையடுத்து டாக்டர்கள் சிகிச்சையை ஆரம்பித்தனர். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்தார். மறைந்த ஷாருக் கபூருக்கு வயது 23. அவர் மரணமடைந்த தகவல் சென்னையில் இருந்த நடிகர் ராஜ்கபூர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. தனது ஒரே மகன் மரணமடைந்ததை கேட்டு ராஜ்கபூரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

முயற்சியில்

முயற்சியில்

தனது மகன் ஷாருக் கபூரை ஹீரோவாக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார் ராஜ்கபூர். இந்தத் தகவலால், திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மறைந்த தனது மகன் உடலை சென்னைக்கு கொண்டு வரும் முயற்சியில் ராஜ்கபூர் ஈடுபட்டார். ஆனால், புனித பயணம் சென்ற இடத்தில் இருந்து, உடலை கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்று கூறப்பட்டது.

உடல் அடக்கம்

உடல் அடக்கம்

இதையடுத்து ராஜ்கபூர் தனது உறவினர்களுடன் கடந்த சில நாட்களுக்க்கு முன் மெக்காவுக்குச் சென்றார். அங்குள்ள சம்பிரதாயபடி ஷாருக் கபூர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்றுமுன் தினம் சென்னை திரும்பினார் ராஜ்கபூர். அவரது மனைவி கேரளாவில் இருக்கிறார். இப்போது அவர் அங்கு சென்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X