உருவாகிறது 'என் ராசாவின் மனசிலே' 2 ம் பாகம்.. ராஜ்கிரண் மகன் இயக்குகிறார்..பிறந்த நாளில் அறிவிப்பு!

By

சென்னை: ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

கஸ்தூரி ராஜா இயக்கிய, என் ராசாவின் மனசிலே என்ற படம் ஹீரோவாக அறிமுகமானவர் ராஜ்கிரண்.

1991 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அவர் ஜோடியாக, மீனா நடித்திருந்தார்.

வடிவேலு அறிமுகம்

வடிவேலு அறிமுகம்

ரவிச்சந்தர், சாரதா பிரீதா, கவுண்டமணி, செந்தில் உட்பட பலர் நடித்திருந்தனர். சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் படத்தில்தான், வடிவேலுவை நடிகராக அறிமுகப்படுத்தினார் ராஜ்கிரண். இளையராஜா இசை அமைத்திருந்த இந்தப் படத்தை ராஜ்கிரண், தனது ரெட் சன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்திருந்தார்.

என் ராசாவின் மனசிலே

என் ராசாவின் மனசிலே

இதன் பாடல்களும் படமும் செம ஹிட். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்த ராஜ்கிரண், படங்களையும் இயக்கினார். இப்போதும் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். ராஜ்கிரணின் முதல் படமான 'என் ராசாவின் மனசிலே' படம் இப்போதைய ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

நைனார் முஹம்மது

நைனார் முஹம்மது

இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதுபற்றி கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இதை நடிகர் ராஜ்கிரண் இப்போது உறுதி செய்துள்ளார். இந்தப் படத்தை நடிகர் ராஜ்கிரனின் மகன், திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க இருக்கிறார்.

20 வது பிறந்த நாள்

20 வது பிறந்த நாள்

இதுகுறித்து நடிகர் ராஜ்கிரண் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதுவின் இருபதாவது பிறந்த நாள். 'என் ராசாவின் மனசிலே' இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்.

வெற்றிப்பட இயக்குனராக

வெற்றிப்பட இயக்குனராக

அவரே இந்தப் படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன். இவ்வாறு நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார். கடந்த சில வருடங்களாக 2 ஆம் பாக படங்கள் அதிகமாக உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் இந்தப் படம் உருவாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X