இதுவரை பார்த்திராத கெட்டப்பில் ராஜ்கிரண்.. வைரலாகும் புகைப்படம்!

சென்னை : எப்பொழுதும் பார்க்க கம்பீரமான தோற்றத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ராஜ்கிரண். தான் நடிக்கும் திரைப்படங்களை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதுவரை தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த ராஜ்கிரண் முதன் முறையாக மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஷய்லாக் என்ற திரைப்படத்தில் நடித்து மலையாளத்திலும் தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார்.

இவ்வாறு அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வரும் நடிகர் ராஜ்கிரண் இப்போது நீண்ட தாடியுடன் இதுவரை பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்கள் வைரலாகி வருகிறது.

என் ராசாவின் மனசிலே

என் ராசாவின் மனசிலே

"ராசாவே உன்ன நம்பி" திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களம் இறங்கிய ராஜ்கிரண் அதைத்தொடர்ந்து " என் ராசாவின் மனசிலே" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றிகரமாக இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ரொமான்டிக் ஹீரோ

ரொமான்டிக் ஹீரோ

ராஜ்கிரண் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்த நிலையில் இவர் நடிக்கும் திரைப்படங்களை இவரே தயாரித்து வெளியிட்டு வந்தார். கம்பீரமான தோற்றத்துடன் வேட்டியை கையை மடித்து கட்டி தொடையை காட்டிக்கொண்டு பெரும்பாலான படங்களில் வலம் வந்த ராஜ்கிரணை "பா பாண்டி" திரைப்படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக மாற்றினார் தனுஷ். மேலும் பா பாண்டி திரைப்படம் தனுஷுக்கு அறிமுக இயக்குனராக அமைந்த திரைப்படமாகும்.

மலையாளத்தில் ஷய்லாக்

மலையாளத்தில் ஷய்லாக்

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து மேலும் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ள ராஜ்கிரண் இதுவரை தமிழ் திரைப் படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியான "ஷய்லாக்" என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்படங்களில் தனது அறிமுகத்தை கொடுத்துளார்.

லேட்டஸ்ட் லுக்

லேட்டஸ்ட் லுக்

பணம் கொடுத்தால் போதும் நடிக்க தயார் என இருக்கும் பல நடிகர்களுக்கு மத்தியிலும் தன் மனதிற்கு சரி என்ற படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ராஜ்கிரண். இதுவரை இவரை யாரும் தாடியுடன் பார்த்ததே இல்லை எப்போதும் கிளின்சேவ்வுடனே கம்பீரமாக வலம் வருவார். தற்போது இவர் நீண்ட தாடியுடன் வித்தியாசமான லுக்கில் பார்க்க ஆளே டோட்டலாக மாறி உள்ளார். இவரின் வித்தியாசமான லேட்டஸ்ட் லுக் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X