ஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவர் தானாம்.. டாப்ஸி ஹீரோயின்.. அப்போ அட்லி படம்?

மும்பை: பதான் படத்தை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி படத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் தான் ராஜ்குமார் ஹிரானி.

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி இணைந்து நடிக்கப் போகிறார் என்கிற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

பதான் பந்தயம் அடிக்கும்

பதான் பந்தயம் அடிக்கும்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ஜீரோ படம் பெயரை போலவே பாக்ஸ் ஆபிஸிலும் ஜீரோவான நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக புதிய படங்கள் ஏதும் அவர் நடிப்பில் வெளியாகாமல் போனது தென்னிந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய பலமாக மாறியது. வார் படத்தை இயக்கி ஹிரித்திக் ரோஷனுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகி வரும் பதான் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அந்த படம் வெளியாகிறது.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில்

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில்

இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் 'Dunky' எனும் படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு புரமோ வீடியோவுடன் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் ஷாருக்கான், எனக்கு ஏதாவது கதை இருக்கா சார் என கேட்க, ராஜ்குமார் ஹிரானி டன்கி படத்தின் அறிவிப்பை வெளியிடுகிறார்.

ராஜ்குமார் ஹிரானி படங்கள்

ராஜ்குமார் ஹிரானி படங்கள்

சஞ்சய் தத் நடிப்பில் வெளியான முன்னா பாய் எம்பிபிஎஸ் படத்தைத் தான் கமல்ஹாசன் இங்கே வசூல் ராஜா எம்பிபிஎஸ் என ரீமேக் செய்து நடித்தார். 3 இடியட்ஸ் படம் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்க நண்பன் ஆக இங்கே ரீமேக் செய்யப்பட்டது. பிகே படத்தின் பாதிப்பு தான் ஆர்ஜே பாலாஜியை மூக்குத்தி அம்மன் படத்தை இயக்க வைத்தது. இப்படி திரைக்கதையில் வலிமை கொண்ட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் அடுத்ததாக நடிக்க உள்ளார்.

டாப்ஸி ஹீரோயின்

டாப்ஸி ஹீரோயின்

முதன்முறையாக நடிகை டாப்ஸி ஷாருக்கான் உடன் இணைந்து இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஷாருக்கான் உடன் இணைந்து நடிக்க கிடைத்த வாய்ப்பு ரொம்பவே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என நடிகை டாப்ஸியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ரிலீஸ் தேதியுடன்

2023ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி Dunky திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்கிற அறிவிப்பும் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. நீண்ட தலைமுடியுடன் பதான் படத்தில் நடித்து வந்த ஷாருக்கான், லேசாக ஹேர்கட் பண்ணிக் கொண்டு புதிய தோற்றத்துடன் மாறியுள்ள வீடியோ ரசிகர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

டாங்கியா

டாங்கியா

3 இடியட்ஸ், பிகே படங்களை போல காமெடி, காதல், எமோஷன் இந்த படத்திலும் இருக்குமா என்றும் டாங்கி (கழுதை) என உச்சரித்து விட மாட்டார்களே என்றும் என்றும் ஷாருக்கான் கேட்க, அதை கடவுள் தான் முடிவு செய்ய வேண்டும் என ராஜ்குமார் ஹிரானி பதில் கொடுக்கும் காமெடியான வீடியோ வெளியாகி உள்ளது.

அப்போ அட்லி படம்

அப்போ அட்லி படம்

சமீபத்தில் பீஸ்ட் படத்தின் டிரைலரை அட்லியுடன் இணைந்து பார்த்தேன் என ஷாருக்கான் சொன்னதும் அடுத்ததாக அட்லி உடன் அவர் நடித்து வரும் படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷாருக்கான் இன்னமும் அட்லி படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ராஜ்குமார் ஹிரானி படம் முடிந்த பிறகு தான் அட்லி பட அறிவிப்பு வெளியாகுமா? வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X