Don't Miss!
- News
கைக்குழந்தைக்கு "தனி டிக்கெட்" கேட்ட விமான நிறுவனம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! அலறிய ஏர்போர்ட்
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் படத்தின் ஹீரோயின் இவர் தானா? வேறலெவல் தான் போங்க!
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தின் ஹீரோயின் யார் என்பதற்கான விடை கிடைத்திருக்கிறது.
விஜய் டிவியில் கடந்த ஜனவரி 16ம் தேதி ஒளிபரப்பான பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த படத்தை பிக் பாஸ் நிகழ்ச்சிகளை இயக்கி வந்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கப் போவதாகவும் அதே விழாவில் அறிவிக்கப்பட்டது.
நடிகர் விஜய் அம்மா பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு.. உண்மையா? ஃபேக்கா? குழப்பத்தில் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் 21
விஜய் டிவியில் தொகுப்பாளராக கலக்கி வந்த சிவகார்த்திகேயன் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக மாறி உள்ளார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 21வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கப் போவதாக பிக் பாஸ் சீசன் 5 நிறைவு விழாவில் அறிவிக்கப்பட்டது. அந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.

ஹீரோயின் யார்
நடிகர் சிவகார்த்திகேயன் உடன் சாய் பல்லவி இணைந்து ஒரு படத்தில் நடிக்க கமீட் ஆகி உள்ளார் என்கிற தகவல் நீண்ட காலமாக உலாவி வருகிறது. இந்நிலையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் அந்த புதிய படத்தில் சாய் பல்லவி தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

ராஜ்குமார் பெரியசாமி பாராட்டு
நானி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ஷியாம் சிங்கா ராய் படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. சினிமா பிரபலங்கள் பலரும் சாய் பல்லவியை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகை சாய் பல்லவியை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வெகுவாக பாராட்டி போட்ட ட்வீட் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் சாய் பல்லவி தான் அடுத்த படத்தின் ஹீரோயின் என்பதை உறுதியே செய்ய வைத்துள்ளது.

சிக்னல்
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நடிகை சாய் பல்லவியை பாராட்டிய நிலையில், அவருக்கு ட்வீட் போட்டு நன்றி கூறியுள்ளார் சாய் பல்லவி. மேலும், சமீபத்தில் அவர் இயக்கப் போகும் படத்தின் அறிவிப்பு வெளியானது சந்தோஷத்தை அளித்துள்ளது எனக் கூறி தானும் அந்த படத்தில் நடிக்கப் போகிறேன் என்கிற சிக்னலை சாய் பல்லவி கொடுத்துள்ளார்.

சாய் பல்லவியின் நடிப்பு
கமர்ஷியல் ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதைகளை தேர்வு செய்து நல்ல நடிப்பை வழங்கி அசத்தி வருகிறார் நடிகை சாய் பல்லவி. நானியின் ஷியாம் சிங்கா ராய் படத்தில் நடிகை பலரும் நடிக்க யோசிக்கும் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி எடுத்துள்ளார். அதிலும், அவர் நடனமாடும் அந்த ஒரு காட்சியே அவரது நடிப்பு திறமைக்கு மிகப்பெரிய சான்றாக மாறியுள்ளது.