Amaran - அமரன் திரைப்படம் உருவாக காரணம் இதுதான்.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஷேரிங்ஸ்
சிவகார்த்திகேயன் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். தேர்ந்தெடுக்கும் கதைகள் கமர்ஷியலாக இருப்பதால் சிறுவர், சிறுமிகள் மத்தியில் அவருக்கு நல்ல கிரேஸ் உண்டு. அதேபோல் குடும்பத்தினரும் சிவாவின் படங்களை விரும்பி பார்க்கின்றனர். விஜய்யும் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் கண்டிப்பாக அவர் இடத்தை சிவகார்த்திகேயன் ரீப்ளேஸ் செய்வார் என்று எஸ்கே ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். அவரது நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.
அடுத்த படங்கள்: அயலான் படத்தின் வெற்றி அவரை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் அதற்கு முன்னதாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

வசூல் வேட்டை: இந்த பொங்கல் ரேஸ் சிவகார்த்திகேயனுக்கு முக்கியமானதாகவே கருதப்பட்டது. ஏனெனில் அயலான் திரைப்படத்துக்கு போட்டியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. தனுஷால் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். எனவே இதில் தனுஷை சிவா வெல்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்தது. எஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் வென்றுவிட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள். ஏனெனில் அயலான் திரைப்படத்தின் வசூல் 75 கோடி ரூபாயை தாண்டிவிட்டது.
எதிர்பார்ப்பில் அமரன்: அயலான் படத்துக்கு பிறகு அவரது நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதனை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமடைந்துள்ளன. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு சில நாட்களுக்கு படத்தின் பெயர், டீசர், போஸ்டர்கள் என அப்டேட்டுகளாக குவிந்து ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய ராணுவ வீரர் முகுந்த வரதராஜனின் பயோபிக்காக இப்படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்குமார் பெரியசாமி ஷேரிங்ஸ்: இந்நிலையில் அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அமரன் படம் உருவாக காரணம் குறித்து பேசியிருக்கிறார். அவர் அந்தப் பேட்டியில், "ரங்கூன் படத்துக்கு பிறகு நான் வேறு ஒரு கதை பண்ணியிருந்தேன். ஏதாவது இங்கு நடந்தால்தான் நிச்சயம் என்பதுதான் ஒன்லைன். அது மிகப்பெரிய படம். கிட்டத்தட்ட ஷூட்டிங் போகும் சமயத்தில் ஆர்ட்டிஸ்ட்டுகளின் டேட்ஸ் பிரச்னை வந்தது. அதனால் அந்த நேரம் எடுக்க முடியவில்லை.
மிகப்பெரிய பட்ஜெட்: ரங்கூன் படத்துக்கு பிறகு நான் கமிட்டான படத்தால்தான் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது. என்னை பொறுத்தவரை காத்திருப்பதுகூட படம் உருவாவதற்கான நேரம் என்றுதான் நினைப்பேன். எனக்கு வெளியில் இருந்து பார்க்கும்போது அடுத்த படம் பற்றி பார்க்கிறவர்கள், கேட்கிறவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதுதான் பெரிய டாஸ்க்காக இருக்கும்.
மும்பையிலிருந்து வந்த ஃபோன்: அந்த சமயத்தில்தான் எனக்கு மும்பையில் இருக்கும் நண்பர் ஒருவர் ஃபோன் செய்து, "India's Most Fearless" என்ற புத்தகம் ஒன்று ஒருக்கிறது. அதில் இப்போது நான்கு பாகங்கள் வந்துவிட்டன. அதன் ஒவ்வொரு பாகமும் 15 ரியல் ஹீரோக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும். அதில் போர்முனை, இந்திய பாதுகாப்புத் துறையில் இருப்பவர்களின் வீர தீர செயல்கள் குறித்த தகவல்கள் நிறையவே இருக்கும்.
முகுந்த வரதராஜன்: அதில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் பற்றி இரண்டு தகவல்கள் இருப்பதாக நண்பர் சொன்னார். நான் முதலில் மேஜர் சரவணனாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் அந்த நண்பர் யாராக இருக்கும் சொல்லுங்கள் என்று கேட்டார். நான் நீண்ட யோசனைக்கு பிறகு மேஜர் முகுந்த் வரதராஜனா? என கேட்டேன். அவர் சரியாக சொல்லிட்டீங்க என பதிலளித்தார். நான் டிவியில் மேஜர் முகுந்த்தின் மரணம் பற்றியும், வாழ்க்கை வரலாறு பற்றியும் பார்த்தேன். பிறகு இந்தப் படம் உருவாக அது ஆரம்பப்புள்ளியாக இருந்தது” என்றார்.


Click it and Unblock the Notifications











