»   »  கமல் ஹாஸனை பார்க்கத் துடிக்கும் ஸ்ருதியின் லேட்டஸ்ட் ஹீரோ

கமல் ஹாஸனை பார்க்கத் துடிக்கும் ஸ்ருதியின் லேட்டஸ்ட் ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்ருதியுடன் நடித்த பிறகு அவரின் தந்தை கமல் ஹாஸனை பார்க்கத் துடிக்கிறார் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ்.

தேசிய விருது பெற்ற ராஜ்குமார் ராவ், ஸ்ருதி ஹாஸன் சேர்ந்து நடித்த பெஹன் ஹோகி தேரி இந்தி படம் இன்று ரிலீஸாகி உள்ளது. படத்தை பார்த்தவர்கள் ராஜ்குமார் மற்றும் ஸ்ருதியை பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் ஸ்ருதி, கமல் ஹாஸன் பற்றி ராஜ்குமார் கூறியிருப்பதாவது,

கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

கமல் சார் ஒரு லெஜண்ட். அவர் எப்பொழுதுமே ஒரு இன்ஸ்பிரேஷன். பல படங்களில் அவரின் நடிப்பை பார்த்து நான் வியந்துள்ளேன். அதிலும் குறிப்பாக அப்பு ராஜாவில் அவரின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ரசிகன்

ரசிகன்

நான் கமல் ஹாஸன் சாரின் மிகப் பெரிய ரசிகன். நான் அவரை சந்தித்து சினிமா பற்றி நிறைய பேச வேண்டும் என்று ஸ்ருதியிடம் கூறினேன். அவரும் சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.

ஸ்ருதி

ஸ்ருதி

ஸ்ருதி ஒரு அருமையான பெண். திரையில் அவர் அழகாக உள்ளார். வேலையில் அர்ப்பணிப்பு மிக்கவர் ஸ்ருதி. பெஹன் ஹோகி தேரி படத்தில் அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி என்றார் ராஜ்குமார்.

படம்

படம்

ஸ்ருதி ஹாஸனின் கையில் சபாஷ் நாயுடு படத்தை தவிர வேறு புதுப்படம் இல்லை. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள பெஹன் ஹோகி தேரி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After having worked with his daughter Shruti, actor Rajkumar Rao now wants to meet her father, southern superstar Kamal Haasan, and talk about cinema.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil