உன்னை எனக்கு புடிக்கும் அதான் உனக்கு லைக்கொடுத்தேன்..பேச்சு வாக்கில் அக்ஷராவுக்கு வலை வீசும் ராஜு

சென்னை : உன்னை எனக்கு புடிக்கும் அதான் உனக்கு லைக்கொடுத்தேன் என்று அக்ஷராவிடம் தனியாக ரூட் விடுகிறார் ராஜூ.

இந்த வீட்டில் எப்போ லவ் ஸ்டோரி ஸ்டார்ட் ஆகும் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ராஜூ லீட் கொடுத்துவிட்டார்.

இனி அவ்வளவு தான் ராஜூ அக்ஷராவை ஜோடி சேர்த்து வைத்து இணையத்தில் உருட்ட ஆரம்பித்துவிடுவார்கள் நெட்டிசன்ஸ்.

லைக் கொடுத்த ராஜூ

லைக் கொடுத்த ராஜூ

ஒரு கத சொல்லட்டுமா டாஸ்கில் அக்ஷரா தான் கடந்து வந்த பாதை குறித்து பேசினார். அதில் சிறுவயதில் என் அப்பா இறந்துவிட்டார். என் அண்ணன் அப்பா இறந்த குறையே தெரியாமல் என்னை வளர்த்தார். என் அம்மா எனக்காக எதுவேணும்னாலும் செய்வாங்க என்று கூறினார். இதற்கு பிரியங்கா, அபிஷேக், நிரூப் 3 பேரும் டிஸ்லைக்கொடுத்தனர். ஐக்கி ஹாட் கொடுத்தார், ராஜூ உட்பட மற்ற அனைவரும் லைக் கொடுத்தனர்.

உனக்கு பிடிச்சா லைக் தருவியா?

உனக்கு பிடிச்சா லைக் தருவியா?

இதையடுத்து, ராஜூவிடம் பேசிய பிரியங்கா சின்னப்பொண்ணு அக்கா அவ்வளவு கஷ்டப்பட்டதை சொன்னாங்க அவங்க கதைக்கு நீ டிஸ்லைக் கொடுத்த ஆனால், அக்ஷரா கதையில ஒன்னுமே இல்ல அதற்கு எப்படி லைக் கொடுத்த என்று கேட்கிறார். அக்ஷரா மேல எனக்கு மரியாதை இருக்கு அதனால லைக்கொடுத்தேன் என்றார். உனக்கு யாரையாவது பிடிக்கலனா டிஸ்லைக் கொடுப்பியா என்று ராஜுவை பங்கமாக கலாய்த்துவிட்டார் பிரியங்கா.

உன்னை எனக்கு பிடிக்கும்

உன்னை எனக்கு பிடிக்கும்

இதையடுத்து, லைக் கொடுத்ததற்கான காரணத்தை ராஜு, அக்ஷராவிடம் கூறுகிறார். நான் லைக் கொடுத்ததற்கு காரணம் உண்மையில் உன்னை எனக்கு பிடிக்கும், ஏன்னா... உனக்கு எல்லாரும் டிஸ்லைக் கொடுத்த போது நீ அழுததை நான் பார்த்தேன், நானும் டிஸ்லைக் கொடுத்தா நீ ரொம்ப வருத்தப்படுவேனு எனக்கு நல்லாவே தெரியும்.

மிஸ் பண்ண விரும்பல

மிஸ் பண்ண விரும்பல

இந்த வீட்டில் ரசிகையா நீ இருக்க, என்னை நீ ரசிக்கிற... அது எனக்கு புடிச்சு இருக்கு... அதை நான் மிஸ் பண்ண விரும்பல. இப்பவும் லைக் கொடுத்ததற்காக நான் ஃபீல் பண்ணல என்று தனி ரூட் விட்டுக்கொண்டு இருக்கிறார் ராஜு. அதற்கு அக்ஷரா ஏன் கில்டியா ஃபீல் பண்ற விடு, அவங்களுக்கு பேச தெரிந்து கதையை சரியா சொல்லல, எனக்கு கதை சொல்லத் தெரியல நான் சரியா சொல்லல அவ்வளவுதான் ஃபீல் பண்ணாத என்று கூறிவிட்டு அக்ஷரா தனியா சென்று அழுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X