4000 கோடிக்கு ஆசைப்பட்டு வந்தாரா சோபிதா துலிபாலா?.. சமந்தா ஏமாற்றப்பட்டாரா?.. ராஜ்மோகன் பளிச்!

சென்னை: பாபா பிளாக்‌ஷீப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான யூடியூபர் ராஜ்மோகன் தொடர்ந்து தனது ராஜ்மோகன் ரிப்போர்ட் எனும் யூடியூப் சேனலில் பல விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். இந்நிலையில், நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் தொடர்பாக சோபிதா துலிபாலா மீது குவியும் வன்மங்களுக்கு எதிராக அவர் ஒரு வீடியோ போட்டு பேசியுள்ளார்.

நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நாக சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா மற்றும் நாகார்ஜுனாவின் அப்பா நாகேஸ்வர ராவ் என பரம்பரை பரம்பரையாக சினிமாவில் சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் குடும்பம் அது.

Samantha Naga Chaitanya Sobhita Dhulipala

சுமார் 4000 கோடி வரை சொத்துக்கள் உள்ள குடும்பத்திற்கு மருமகளாக சமந்தா போனதே அந்த சொத்துக்கு ஆசைப்பட்டுத் தான் என சொல்லப்பட்ட நிலையில், அதே போன்ற ஒரு பஞ்சாயத்து தற்போது சோபிதா துலிபாலா தலைமீதும் வந்து விழுந்திருப்பதாக ராஜ்மோகன் பேசியுள்ளார்.

சமந்தா ஏமாற்றப்பட்டாரா?: நாக சைதன்யாவை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சமந்தா ஒரு கட்டத்தில் அவருடன் சேர்ந்து வாழ முடியாது என்கிற முடிவை எடுக்கிறார். அவர்களின் அன்பான ரிலேஷன்ஷிப்பில் என்ன காரணத்தினாலோ டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பாக மாறிவிடுகிறது. அதன் மூலமாக இருவரும் மனம் ஒத்து பிரிய முடிவு செய்கின்றனர். நீதிமன்றத்துக்கு சென்று சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். சமந்தா 4000 கோடி சொத்து இருக்கும் குடும்பத்து பையனான நாக சைதன்யாவை பிரிந்ததே ஜீவனாம்சத்துக்காகத் தான் என பலரும் கூறினர். ஆனால், ஒரு ரூபாய் கூட அவர் ஜீவனாம்சமாக வாங்கவில்லை.

சோபிதா துலிபாலாவுக்கு அந்த ஆசை: அதே போல தற்போது நாக சைதன்யாவை கடந்த சில வருடங்களாக காதலித்து தற்போது லயன்ஸ்கேட் போர்ட்டல் ஓபனாகும் நாள் எனக் கூறப்பட்ட 8-8-8 கூட்டுத் தொகை வரும் ஆகஸ்ட் 8ம் தேதி நிச்சயதார்த்தம் செய்ததே அதே போன்ற ஒரு ஆகஸ்ட் 8ம் தேதி தான் சமந்தாவுக்கு நாக சைதன்யா புரபோஸ் செய்தார். அதனால், சமந்தாவை பழி வாங்க அதே நாளில் நிச்சயம் செய்துக் கொண்டார் என்றும் நாக சைதன்யாவின் குடும்ப சொத்தான 4000 கோடியை ஆட்டையை போடத்தான் சோபிதா துலிபாலா ஏற்கனவே திருமணமான நாக சைதன்யாவை திருமணம் செய்துக் கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டார் என அவர் மீதும் அபாண்டமான பழியை யூடியூப் சேனல்கள் போட்டு வருவதாக ராஜ்மோகன் தனது வீடியோவில் பேசியுள்ளார்.

பர்சனல் மேட்டர்: ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை பிடித்தால் நிச்சயம் செய்துக் கொண்டு திருமணம் செய்துக் கொள்ளலாம். அதே போல பிடிக்கவில்லை. இந்த உறவு டாக்ஸிக்காக இருக்கிறது. ஒருவரது வளர்ச்சி இன்னொருவருக்கு பிடிக்கவில்லை என்றால் பிரிந்து வாழ்ந்து விடுவோம் என முடிவு செய்து விவாகரத்து செய்தால் அதற்கும் சட்டப்பூர்வமாக முழு சுதந்திரம் இருப்பது தான் விவாகரத்து. ஆனால், அதை ஏன் இந்த சோஷியல் மீடியாவில் இவ்வளவு கொச்சையான விஷயமாக மாற்றி சமந்தா பற்றியும் சோபிதா துலிபாலா பற்றியும் நாக சைதன்யா பற்றியும் அவருடைய அப்பா நாகார்ஜுனாவும் 2 திருமணம் செய்துக் கொண்டார் என அவரையும் இழுத்து பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை என ராஜ்மோகன் காட்டமாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X