Rajni: லியோ படத்தின் மாஸ் சீன்... அப்படியே ஜெயிலரில் காப்பியடித்த ரஜினி..? என்ன தலைவரே இதெல்லாம்!!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. நெல்சன் இயக்கிய இந்தப் படத்தில், ரஜினியின் மாஸ் சீன்ஸ் அனைத்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக சொல்லப்படுகிறது.

 Rajni: Rajini copied Lokeshs mass scene for Leo in Jailer

இதற்காக தலைவர் 171 கதை சொன்ன போது, லியோவில் வரும் மாஸ் சீன் குறித்து லோகேஷ் பேசியதாகவும், அதனை அப்படியே ஜெயிலர் படத்துக்காக ரஜினி காப்பி அடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

லியோ மாஸ் சீனை காப்பியடித்த ஜெயிலர்: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10ம் தேதி வெளியானது. முதன்முறையாக இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினி - இயக்குநர் நெல்சன் கூட்டணி, ரசிகர்களுக்கான ஆக்‌ஷன் ட்ரீட்டாக ஜெயிலர் படத்தை கொடுத்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக ரஜினிக்கு கம்பேக் கொடுக்கும் படமாக ஜெயிலர் அமைந்துள்ளது.

ஜெயிலரைத் தொடர்ந்து ரஜினியின் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியாகவுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில், ரஜினி கேமியோ ரோலில் மட்டுமே நடித்துள்ளார். ஆனாலும், இந்தப் படத்துக்கு தலைவர் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லால் சலாம் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், அடுத்ததாக த செ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

இந்தப் படத்தின் ஷூட்டிங் அக்டோபரில் தொடங்கவுள்ளது. இதனிடையே ரஜினி - லோகேஷ் கூட்டணி இணையவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட இந்தக் கூட்டணி உறுதியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். தலைவர் 171 படத்தின் கதை சொல்வதற்காக ரஜினியை சந்தித்துள்ளார் லோகேஷ். அப்போது தலைவர் 171 கதை சொல்லி முடித்ததும், விஜய்யின் லியோ திரைப்படம் பற்றி கேட்டுள்ளார் ரஜினி.

இதனால், லியோ படத்தில் இருந்து ஒரெயொரு மாஸ் சீனை மட்டும் ரஜினியிடம் கூறியுள்ளார் லோகேஷ். ஆனால், அந்த காட்சி அப்படியே ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். ஜெயிலரில் இடைவேளை காட்சிக்கு முன்னர் வரும் ஸ்னைப்பர் கன் ஷூட் சீன் தான் அது என சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்த லோகேஷ் கனகராஜ் ரொம்பவே ஷாக்காகிவிட்டதாகத் தெரிகிறது.

இதனால், தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையலாமா அல்லது வேண்டாமா என லோகேஷ் குழப்பத்தில் உள்ளாராம். இந்தத் தகவல் 100 சதவீதம் உண்மை தான் எனவும், ரஜினியே இப்படியெல்லாம் செய்வார் என லோகேஷ் சுத்தமாக எதிர்பார்க்கவில்லையாம். அதேநேரம் லோகேஷ் எழுதிய அந்த மாஸ் சீன் லியோ படத்தில் இடம்பெற்றுள்ளதா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X