ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம். வருங்கால கணவர் புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை. அப்படி காதலாமே
பெங்களூரு: தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பிரபல நடிகை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
தமிழில், சமுத்திரக்கனி நடித்த அடுத்த சாட்டை படத்தில் நடித்தவர், ராஜ்ஶ்ரீ பொன்னப்பா.
அன்பழகன் இயக்கி இருந்த இந்தப் படத்தில் தம்பி ராமையா, அதுல்யா ரவி, பிச்சைக்காரன் மூர்த்தி உள்பட பலர் நடித்திருந்தனர்.

ராஜ்ஶ்ரீ பொன்னப்பா
இந்தப் படத்துக்கு முன் கன்னடத்தில், வசுந்தரா, ராக்கெட், ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார், ராஜ்ஶ்ரீ பொன்னப்பா. பெங்களூரைச் சேர்ந்த இவர், மலையாளத்திலும் நடித்திருக்கிறார். இவர் தனது வருங்கால கணவரின் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

லண்டனில் படித்தவர்
இந்தப் புகைப்படங்கள், வேகமாக பரவி வருகின்றன. நடிகை ராஜ்ஶ்ரீ, பாலிவுட் டைரட்டர் ஆதிர் பட் என்பவரைக் காதலித்து வந்தார். சில ஹிட் படங்களில் பணியாற்றி இருக்கிறார் ஆதிர் பட். இதையடுத்து இரண்டு குடும்பத்தினரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆதிர், லண்டனில் படித்தவராம்.

வருங்கால கணவர்
இவர்கள் திருமண நிச்சயதார்த்தம், சில நாட்களுக்கு முன் ரகசியமாக நடந்தது. இதை பின்னர் சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார் ராஜ்ஶ்ரீ. இந்த நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்நிலையில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் சில புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

ஈர்த்த புத்திசாலித்தனம்
இதுபற்றி நடிகை ராஜ்ஶ்ரீ கூறும்போது, பொதுவான நண்பர்கள் மூலம் அறிமுகமானார், ஆதிர் பட். அவருடைய புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்பட்டு, காதலில் விழுந்தேன். சில வருடங்களாக காதலித்தோம். வீட்டில் சம்மதம் தெரிவித்தனர். திருமணம் அடுத்த வருடம் நடக்க இருக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











