கட்டிப்பிடிப்பதில் என்ன தப்பு... ஐக்கி பேசியதை மறக்க முடியல.. ராஜுவிடம் குமுறிய பிரியங்கா !
சென்னை : ஐக்கி பெர்ரி கட்டிபிடிப்பது பற்றி பேசியதை எண்ணால் மறக்க முடியவில்லை என்று பிரியங்கா வருத்தத்துடன் கூறியுள்ளார்
இதையடுத்து இந்த வாரத்திற்கான லக்ஜரி பட்ஜெட் டாஸ்க்கில் நகரமா? கிராமா என்பதே டாஸ்க் இதற்கா ஹவுஸ்மெட்கள் இரண்டு அணிகளாக பிரிந்தனர்.
இந்த டாஸ்கிற்காக கார்டன் ஏரியாவில் செட் அமைக்கப்பட்டது. இதில், நகரத்தார் டீமுக்கு நிரூப்பும், கிராமத்தினர் டீமுக்கு அக்ஷராவும் தலைவர்களாக நியமிக்கப்படுகிறார். நெருப்பு காயினை வைத்திருக்கும் இசைவாணி நடுவராக இருக்கிறார்.

முகம் சுழிக்க வைக்கும்
இந்த டாஸ்கில் இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுபவர்கள் கிராமத்து மக்களா? நகரத்து மக்களா? என்ற தலைப்பில் பிக்பாஸ் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து விவாதித்தனர். அப்போது பேசிய, ஐக்கி பெர்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்ப்பதால் பிரியங்கா சக போட்டியாளர்களை பாசத்துடன் கட்டிப் பிடிப்பது சிலரை முகம் சுழிக்க வைக்கும் என்றார்.

என்னுடைய பழக்கம்
இதற்கு பதில் கொடுத்த பிரியங்கா, 11 ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருக்கிறேன், பிறரை கட்டிப்பிடித்து என்னுடைய பாசத்தை வெளிப்படுத்துவேன். அதுவும் சைடா இல்ல நேருக்கு நேர் இருக்கமாக கட்டிப் பிடிப்பது தான் என்னுடைய வழக்கம் என்றார். இந்த கட்டிப்புடி வைத்தியத்தை கற்றுக்கொடுத்ததே உலகநாயகன் கமலஹாசன் தான் என்று பேசி இருந்தார். உடனே ஐக்கியும் பிரியங்காவும் சமாதானம் ஆகிவிட்டனர்

தாமரை சேஃப்
இதையடுத்து, கார்டன் ஏரியாவில் ராஜு மற்றும் பிரியங்கா பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அப்போது ராஜூ, இந்த வாரம் தாமரை சேஃப் நாமினேஷனில் இல்லை என்கிறார். கேம் என்பதே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் திருடுவது தான். ஆனால், இவங்க தாமரைக்கிட்ட கேட்டு எடுத்து இருக்கலாம்... இல்லை தெரியாமல் திருடுவதான் இவர்களின் எண்ணமா என்கிறார்.

காயினுக்கு சலுகை
இதையடுத்து, பேசிய பிரியங்கா அவ ஒரு போட்டியாளர், அவ ஒரு நாள் போவா, நீ , நான் எல்லாரும் ஒரு நாள் போவோம். தாமரையை காப்பாத்தனும்னு நினைச்சது உண்மைதான். ஆனால் இந்த காயினுக்கு இவ்வளவு சலுகை இருக்கும்னு தெரிஞ்சி இருந்தா யாரும் மத்தவங்கள காப்பாத்தி விளையாடி இருக்க மாட்டோம் என்றார்.

எண்ணால மறக்க முடியாது
தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்த பிரியங்கா நேற்று, ஐக்கி பெர்ரி கட்டிபிடிப்பது பற்றி பேசியது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, அவ பேசியதை எண்ணால மறக்க முடியாது இந்த வீட்டில் நான் இருக்குற வரைக்கும் என் மனசுல அது நிச்சயம் இருக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











