நீ உடைமாற்றும் ரூமிற்குள் நான் வந்தால் தவறில்லையா...ராஜு – பாவனி காரசார விவாதம்
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் 23 ம் நாளான இன்று, நிகழ்ச்சி துவங்கியதுமே உடை மாற்றும் அறையில் தாமரை வைத்திருந்த காற்று நாணயத்தை, பாவனியின் உதவியுடன் சுருதி எடுத்துச் சென்றார்.
இருந்தும் பாவனி தான் உதவவில்லை என்றார் அனைவரிடமும். இது தவறு என்று தாமரை, சுருதி மற்றும் பாவனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது சத்தம் கேட்டு மற்ற ஹவுஸ்மெட்கள் பாத்ரூம் ஏரியாவிற்கு வருகிறார்கள்.

நான் காயினை எடுப்பேன்
அங்கு வரும் ராஜுவிடம், எப்போது அவர் உடையிலேயே வைத்திருந்தால் நான் எப்படி எடுப்பது. யாரிடம் இருந்தாலும் காயினை எடுப்பேன் என நான் ஏற்கனவே கூறியிருந்தேன் என தன்னை நியாயப்படுத்தி பேசுகிறார் சுருதி. அவரிடம் ராஜுவும், நீங்க கூட தான் உடையிலேயே வைத்துள்ளீர்கள். அப்படியானால் நான் எப்படி எடுப்பது என கேட்கிறார்.

தாமரைக்கு ஆதரவு
சிபி, அபினவ், இமான் அண்ணாச்சி, ஐக்கி உள்ளிட்டோர் தாமரைக்கு ஆதரவாக சுருதியிடம் வாக்குவாதம் செய்கிறார்கள். அப்போது பாவனி, ராஜுவிடம் உங்களிடம் நான் ஏன் விளக்கம் சொல்ல வேண்டும் என விவாதிக்கிறார். ராஜுவும், உடை மாற்றம் இடம் என்பது ஒருவரின் தனிப்பட்ட இடம். அங்கு எதற்காக நீ சென்றாய். அங்கு சென்று காயினை எடுத்தது தவறு என்கிறார்.

உன் ரூமிற்குள் வரலாமா
தொடர்ந்து ராஜு, அப்படியானால் காயினை எடுக்க வேண்டும் என்பதற்காக நீ உடை மாற்றும் அறைக்குள் நான் வரலாமா என்கிறார். பாவனியும் பதிலுக்கு, நீ உடை மாற்றும் அறைக்குள் நான் வந்தேனா என்றார். உடை மாற்றும் அறைக்குள் வருவது தவறு. அங்கு சென்று காயினை எடுப்பது மிகவும் தவறானது என்கிறார் ராஜு.

மறுக்கும் சுருதி, பாவனி
ராஜுவும் சுருதியிடம், அது தாமரைக்காக நாங்கள் எடுத்துக் கொடுத்த காயின் அது. அது இப்போது உன்னிடம் உள்ளதா என கேட்கிறார். அதற்கு சுருதி மற்றும் பாவனி இருவருமே இல்லை என மறைக்கிறார்கள். அதை எதற்காக நாங்க உங்களிடம் சொல்ல வேண்டும் என்கிறார்.


Click it and Unblock the Notifications











