கல்யாணம் ஆகிடுச்சா... பெண் போட்டியாளர்களிடம் கேட்ட ராஜு

சென்னை : தமிழ் டிவி ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புடன் அக்டோபர் 3 ம் தேதி முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி துவங்கி உள்ளது. இதில் போட்டியாளர்களாக சினிமா, சின்னத்திரை, மாடலிங், நாட்டுப்புற கலைஞர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் 18 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

Recommended Video

Bigg Boss Season 5 Promo | போட்டுக்க Dress கூட இல்ல, கலங்கும் Housemates

கடந்த நான்கு சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் அதிகம் பிரபலமாகாத, அதிலும் அறிமுகம் இல்லாத முகங்களே பிக்பாஸ் வீட்டிற்குள் காணப்படுகின்றன. இருந்தாலும் இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

 இது கண்டிப்பாக இருக்குமே

இது கண்டிப்பாக இருக்குமே

இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் பிக்பாஸ் வீட்டிற்குள் எது இருந்ததோ இல்லையோ. ஆனால் காதலும், கலகமும் கண்டிப்பாக இடம்பெற்றுள்ளது. அதனால் இந்த சீசனிலும் அது ஏற்படுமா. எப்படியும் அது போன்ற காட்சிகள் இடம் பெற சிறிது காலம் ஆகும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வந்த முதல் நாளே இந்த வேலையை துவக்கி உள்ளார் ராஜு ஜெயமோகன்.

ராஜு கேட்ட அந்த கேள்வி

ராஜு கேட்ட அந்த கேள்வி

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 ன் முதல் நாளான நேற்று, கார்டன் ஏரியாவில் ராஜு, அபினய், அபிஷேக் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் ஸ்ருதி மற்றும் ஐக்கி ஆகியோரிடம் உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என கேட்கிறார் ராஜு. இந்த கேள்வியால் ஷாக்கான ஸ்ருதி, என்னை பார்த்தா கல்யாணம் ஆன மாதிரி தெரியுதா என கேட்கிறார்.

 சமாளிக்கும் ராஜு

சமாளிக்கும் ராஜு

இதனை சமாளிக்கும் ராஜு, பார்த்தால் எனக்கு கண்டுபிடிக்க தெரியாது. ஆகிடுச்சுன்னா ஆகிடுச்சுன்னு சொல்லுங்க. இல்லைன்னா இல்லைன்னு சொல்லுங்க என்கிறார். அதற்கு ஸ்ருதி, இன்னும் ஆகவில்லை என்கிறார். உடனே ஐக்கியிடம் உங்களுக்கு என்றார் ராஜு. அதற்கு அவர், கமிடெட் என்கிறார்.

ஆகிடுச்சா, ஆகலையா

ஆகிடுச்சா, ஆகலையா

பதிலுக்கு ராஜுவிடம், உங்களில் யாருக்கெல்லாம் கல்யாணம் ஆகிடுச்சு என கேட்கிறார் ஸ்ருதி. அதற்கு ராஜு, ஆகவில்லை என்கிறார். ஆனால் அதற்குள் முந்திக் கொண்டு, இவனுக்கு (ராஜு) ஆகிடுச்சு, எனக்கு டைவர்ஸ் ஆகிடுச்சு, இவனுக்கு (அபினய்) ஆகிடுச்சு என்கிறார் அபிஷேக். உங்களுக்கு குழந்தை இருக்கில்ல என ஸ்ருதி, அபினய்யிடம் கேட்கும் கேள்விக்கும் தானே முந்திக் கொண்டு பதிலளிக்கும் அபிஷேக், ஆமா இருக்கு. எனக்கு நான் தான் குழந்தை என்கிறார் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு.

 அதுக்குள்ள ஆரம்பிச்சுடீங்களா

அதுக்குள்ள ஆரம்பிச்சுடீங்களா

இதனால் நேற்றைய எபிசோட்டை பார்த்து விட்டு, வந்து ஒரு நாள் முழுசா ஆகல அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டீங்களாடா உங்க வேலைய என நெட்டிசன்கள் பலர் கடுப்பாகி கலாய்த்து வருகின்றனர். முதலில் போட்டியாளர்கள் பெயரை தவறு இல்லாமல் சொல்லி கூப்பிட பழகுங்கடா. அவங்கள பத்தின கதைய சொல்லட்டும் அதுக்கு பிறகு மத்தத பேசுங்க. எடுத்ததுமே கல்யாணமா என பலர் கூறி வருகின்றனர்.

வேற கேள்வியே இல்லையா

வேற கேள்வியே இல்லையா

அதிலும் ராஜுவை, உனக்கு அந்த பொண்ணு கிட்ட கேட்க வேற எந்த கேள்வியுமே இல்லையா. கவின் ஃபிரண்ட்ன்னு கரெக்ட்டா காட்டுறியே என பலர் நக்கலாக கலாய்த்து, சோஷியல் மீடியாவை தெறிக்க வைத்து வருகின்றனர். சிலர் மீம் கிரியேட்டகள் இந்த சீனனை கவுண்டமணி பேசும், " அது எப்டிடா நீ என்ன பார்த்து அந்த கேள்விய கேட்கலாம்" என்ற டயலாக்கை ஸ்ருதி பேசுவதை போல மீம் உருவாக்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X