பாவனியை இதுக்காகத்தான் பிடிக்காது.. கமல் சார் முன்னாடியே ஓப்பனாக சொன்ன ராஜு பாய்.. வொர்த்தா?
சென்னை: பாவனிக்கும் ராஜு பாய்க்கும், இசைவாணிக்கும் இமான் அண்ணாச்சிக்கும், நிரூப்புக்கும் வருணுக்கும் என ஜோடி ஜோடியாக இந்த சீசனில் சண்டை போட வைத்து வருகிறார்களோ பிக் பாஸ் குழுவினர் என்கிற சந்தேகம் ஆரம்பத்திலேயே இருக்கிறது.
மற்றவர்களிடம் சகஜமாக பேசும் போட்டியாளர்கள் ஒரு சிலர் அல்லது குறிப்பாக ஒருவருடன் மட்டுமே சண்டை போடுவது போல ஏன் செய்கின்றனர் என்கிற கேள்வியும் எழுகிறது.
தன்னை ஏன் வெறுக்குறீங்க ராஜு என பாவனி பகிரங்கமாக கேட்டும் பதில் அளிக்காத ராஜு ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல் கேட்க கண்ணாடியாய் மாறி அத்தனையும் புட்டு புட்டு வைத்தார்.

கமல் கேள்வி
பாவனியின் பிம்பமாக ந்டிக்க ரெடியாகி இருந்த ராஜுவை அது நடக்க விடாமலே அந்த டாஸ்க் முடிக்கப்பட்டது. இப்போ வந்து நீங்க பிம்பமாக மாறி பாவனியை பற்றி பேசலாம் என்றும் பாவனியை ஏன் பிடிக்கல என ராஜுவின் கருத்தை சொல்ல மேடை போட்டு கொடுத்தார் கமல்.

பொய் பேசிய பாவனி
சுருதியும் பாவனியும் சேர்ந்து தான் அந்த காயினை தாமரையிடம் இருந்து திருடினார்கள். ஆனால், எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் சும்மாதான் உடைமாற்றும் அறைக்குள் போனேன் என பாவனி பொய் பேசியதை கேட்டதும் அவர் மீதான கோபம் முதல் முறையாக எழுந்தது என ராஜு அவரது பிம்பமாக இருந்து விளக்கினார்.

ராஜுவின் முரண்
ராஜுவுக்கும் பாவனிக்கும் எந்தவொரு நேரடியான மோதலும் இல்லாத நிலையில், பாவனியை தனது எதிராளியாக மாற்ற ராஜு சொல்லும் முழு காரணமும் தாமரைக்கும் பாவனிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகளை அடுக்கித் தான். தாமரைக்கு சப்போர்ட் பண்ணுவது போல பேசும் ராஜு இமான் அண்ணாச்சிக்காகத் தான் விளையாடுகிறேன் எனக் கூறுவதில் மிகபெரிய முரண் தெரிகிறது.

வொர்த்தா
ராஜு பாவனி மீது அடுக்கிய குற்றச்சாட்டுக்களை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் இது வொர்த்தே இல்லாத விஷயம். பாவனி பொய் முகமூடி போட்டுக் கொண்டு விளையாடுவதாக ராஜு கூறுவதை பார்த்தால் அவரும் அதே முகமூடியை அணிந்து கொண்டு பேசுகிறார் என்றும் இருவருக்கும் இடையேயான பிரச்சனையில் வேறு ஒரு காரணம் உள்ளது. ஆனால், ராஜு அதை சொல்லாமல் மறைக்கிறார் என்றே நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











