Don't Miss!
- News
சென்னை அண்ணா பல்கலை. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
- Automobiles
இந்த இ-ஸ்கூட்டருல போகும்போது லைசென்ஸ் கையில வச்சிருக்கணும்னு அவசியம் இல்ல! போலீஸ் பிடிச்சாலும் பயப்பட வேண்டாம்
- Finance
உக்ரைன் மீதான போர் எதிரொலி: ரஷ்யாவில் இருந்து வெளியேறுகிறதா மார்க்ஸ் & ஸ்பென்ஸர் நிறுவனம்?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Technology
16எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இனிமே மத்தவங்க பார்க்கும் போது வேலை செய்யுறேன் சார்.. பிரியங்காவுக்கு நோஸ் கட் கொடுத்த ராஜு!
சென்னை: ஒரு டீமாக விளையாடி எதிர் அணியை துரத்தி விடலாம் என பிளான் பண்ணி விளையாடி வரும் பிரியங்கா எப்படி ராஜு, இமான் அண்ணாச்சி மற்றும் தாமரையை வெளியே அனுப்பலாம் என்று சிந்தித்து வருவதாலே அவர் கேம் மற்றும் நேம் ஸ்பாயில் ஆகி விட்டது என நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
ராஜுவை டார்கெட் பண்ண வேறு எதுவுமே கிடைக்காத நிலையில், வேலை செய்ய மாட்டேங்கிறார் ஒபி அடிக்கிறார் என்கிற முத்திரையை குத்தி அசிங்கப்படுத்த பார்க்கிறார் பிரியங்கா என்பதை பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் ராஜு ஆர்மியினர் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாகவே மெளனியாக இருந்து வந்த ராஜு தனது ரசிகர்களுக்காக கமல் முன்னிலையில் பிரியங்காவுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

பிரியங்கா வேலை செய்கிறாரா
ராஜு வேலை செய்யல, இமான் அண்ணாச்சி வேலை செய்யல என குற்றம்சாட்டும் பிரியங்கா என்னைக்காவது வேலை செஞ்சிருக்காரா என ராஜு ஆர்மியினர் கேள்வி எழுப்பி விளாசி வருகின்றனர். மற்றவர்களை வேலை ஆட்களாக மாற்றி தனக்கு தேவையான மெடிக்க்யூர், பெடிக்யூர் எல்லாம் செய்து கொள்கிறார். தண்ணி எடுத்துக் கொடுக்க கூட அபிஷேக்கிற்கு ஆர்டர், சாப்பாடு செய்து போடும் தாமரைக்கு முத்தம் என இவர் தான் ஒபி அடித்து வருகிறார் என பொங்கி எழுந்துள்ளனர்.

கமல் கேள்வி
ராஜு மற்றும் இமான் அண்ணாச்சியை கமல் கேள்வியே கேட்க மாட்டேங்கிறார் என்கிற குற்றச்சாட்டை முறியடிக்கும் விதமாக சனிக்கிழமை எபிசோடின் ஆரம்பத்திலேயே இருவரது பஞ்சாயத்தையும் பேசி முடித்து விட்டார் கமல். தாமரையை நீங்க வேலை வாங்குறீங்களா ராஜு என்றும் ஏன் வீட்டில் வேலை செய்றதே இல்லையா என்றும் கேட்டு விட்டார்.

பிரியங்காவுக்கு பதிலடி
தொடர்ந்து தன்னை இந்த ஒரு விஷயத்திலேயே பிரியங்கா டார்கெட் செய்து வருவதை அறிந்தும் அமைதி காத்து வந்த ராஜு ஜெயமோகன் கமல் முன்னிலையில் மொத்தத்திற்கு பதிலடி கொடுத்து விட்டார். வீட்டை பெருக்கி க்ளீன் பண்றேன், பாத்ரூம் க்ளீன் பண்றேன், சமைக்கிறேன் சார் ஆனால், அந்த பாத்திரம் கழுவுறது மட்டும் கஷ்டமா இருக்கு சார் என ஓப்பனாக பேசி விட்டார்.

ஸ்டூல் போட்டு பண்ணுங்க
ஃபர்ஸ்ட் சேவ் ஆகிறதுனால பத்து தேய்க்க கூடாதுன்னு இல்லைங்க என ராஜுவுக்கும் குட்டு வைத்த கமல் உயரமாக இருப்பதால் பாத்திரம் கழுவும் இடத்தில் சிரமமாக இருப்பது என்கிற ராஜுவின் வாதத்தை ஏற்காமல் ஸ்டூல் போட்டு உட்கார்ந்து பண்ணுங்க.. அப்போ பிரியங்காவுக்கு தெரியுதான்னு பார்ப்போம் என சேம் சைடு கோல் அடித்து விட்டார்.