வெஷ பாட்டில் பாவனி.. விளக்கத்தோடு சொன்ன ராஜு.. கனிவா நடந்து கொள்வது போல நடிக்கிறாரா பாவனி?

சென்னை: கமல் சார் உள்பட பலரது குட் புக்கில் இடம் பிடித்துள்ள ராஜு ஜெயமோகன் பாவனியிடம் மட்டும் ஏன் அந்தளவுக்கு ஒரு வெறுப்பை காட்டுகிறார் என்கிற கேள்வி பாவனி ரசிகர்களுக்கு பலமாகவே உள்ளது.

Recommended Video

9 Years Of Thuppaki Movie | Rewind Raja | Filmibeat Tamil

பாவனி ஒரு வெஷ பாட்டில் என்றும் அதற்கான விளக்கத்தை இமான் அண்ணாச்சி மற்றும் சிபிக்கு முன்பாக ராஜு ஜெயமோகன் எடுத்துரைக்கும் காட்சியும் ரசிகர்களுக்கு செம ஷாக்கிங்காக இருந்தது.

கனிவா நடந்து கொள்வது போல பிளான் செய்து சேஃப் கேம் ஆடி வருகிறார் பாவனி என்கிற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ராஜு.

பனிப்போர்

பனிப்போர்

வெளிப்படையாக பேசி சண்டை போடுவர்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றும் இந்த சீசனில் பாவனி மற்றும் ராஜு இடையே நடக்கும் பனிப்போர் தான் நிகழ்ச்சியின் ஹைலைட்டே என்றும் பாவனி ஆர்மியினர் மற்றும் ராஜு ஆர்மியினர் இடையே தான் வெளியேவும் சண்டை என ஏகப்பட்ட விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிய தொடங்கி உள்ளது.

காயின் பிரச்சனை

காயின் பிரச்சனை

தாமரை செல்வியின் காயினை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் அவர் அரை நிர்வாண நிலையில் இருக்கும் போது எடுக்க பிளான் போட்டுக் கொடுத்து உதவிய பாவனியை அந்த பிரச்சனையில் இருந்தே ராஜுவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ராஜு அது தொடர்பாக முகத்துக்கு நேராக நீ டிரெஸ் மாத்தும் போது நான் உள்ளே வந்தா எப்படி இருக்கும் என்றும் எச்சில் துப்பக் கூடாதுன்னு தான் ரூல் இல்லை அதுக்காக துப்புவீங்களா என்றும் பேசியதில் இருந்து பாவனிக்கும் அவரை பிடிக்கவில்லை.

விஷ பாட்டில்

விஷ பாட்டில்

விஷ பாட்டில் என்கிற டைட்டிலை நீங்க கொடுக்கணும்னா யாருக்கு கொடுத்திருப்பீங்க என இமான் அண்ணாச்சி கேட்க, அதை நான் பாவனிக்குத் தான் கொடுத்திருப்பேன் என வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வில் ராஜு ஜெயமோகன் அதிரடியாக பேசிய காட்சிகள் ரசிகர்களை ஷாக் ஆக்கியது.

கனிவாக பேசி நடிக்கிறார்

கனிவாக பேசி நடிக்கிறார்

யாரிடம் தனக்கு பிரச்சனை இருக்கோ அவர்களிடம் கனிவாக பேசி அவர்களை ஏமாற்றுகிறாரோ பாவனி என்கிற டவுட்டு எனக்கு இருக்கு என ராஜு ஜெயமோகன் அதற்கு விளக்கம் கொடுத்தார். தாமரையிடம் கடந்த வாரம் பிரச்சனை ஆன பிறகு சுருதி வெளியேறியதால் இந்த வாரம் தாமரையுடன் கனிவாக பேசி வருகிறார் காரியக்கார பாவனி என பளிச்சென போட்டு உடைத்துள்ளார்.

ராஜுவுக்கு விருது

ராஜுவுக்கு விருது

சிறந்த என்டர்டெயினர் ராஜு என்று தான் பிக் பாஸ் அழைத்து தனியாக கேட்ட போது ஓட்டுப் போட்டு இருந்தார் பாவனி. அவருடைய ஒரே பிரச்சனை அக்‌ஷரா மட்டும் தான். ஆனால், இடையில் அதனை புரிந்து கொள்ளாமல் ராஜு தேவையில்லாமல் வந்து சிக்கிக் கொண்டாரா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X