Bun Butter Jam Blue Sattai Maran Review: கில்மா படமா? ப்ளூ சட்டை மாறன் என்ன இப்படி சொல்லிட்டாரு!

சென்னை: பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன், ஆத்யா பிரசாத், பவ்யா த்ரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி நேற்று அதாவது ஜூலை 18ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் பன் பட்டர் ஜாம். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ள விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவரது விமர்சனத்தில், " கதாநாயகன், கதாநாயகி என இருவரது அப்பா, அம்மாவும் குடும்ப நண்பர்கள். இதில் இரண்டு அம்மாக்களுமே என்ன நினைக்கிறர்கள் என்றால், நமது குழந்தைகள் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்குமே என நினைத்து, அவர்களை யதார்த்தமாக பழக விடுகிறார்கள்.

இருவரையும் காதலிக்க வைத்து திருமணம் செய்து வைத்து விட்டால், லவ் கம் அரேஞ்ச் மேரேஜாக மாறிவிடும் நமக்கும் திருப்தியாக இருக்கும் என திட்டம் போடுகிறார்கள். ஆனால், கதாநாயகன் ஒரு பெண்ணை விரும்புகிறார், கதாநாயகி இன்னொரு பையனை விரும்புகிறார்கள். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கதை.

Bun Butter Jam Blue Sattai Maran Review He Slams Scrennplay Video Goes Trending
Photo Credit:

கில்மா படம்: வழக்கமாக படம் எடுப்பவர்கள், உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் எடுப்பார்கள், இல்லையென்றால் சிறுகதையோ, நாவலோ அல்லது ஏதாவது ஒரு மொழி படத்தையோ அட்டை காப்பி அடித்து படம் எடுப்பார்கள். ஆனால் இந்த டீம் மெகா சீரியலில் இன்ஸ்பயர் ஆகி படம் எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் டீட்டயலாக இந்த படத்தை எடுத்து வைத்தால், இது கில்மா படமாகவே மாறி இருக்கும். கேட்டால் ஜென்-சி படம் அப்படித்தான் இருக்கும் என்பார்கள்.

சீரியல்: படம் முழுக்கவே மெகா சீரியல் மாதிரி போய்க்கொண்டு உள்ளது. மெகா சீரியலில்தான் கதை ஆரம்பிக்கும்போதே 10, 15 கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து வைத்துவிடுவார்கள். அதன் பின்னர் யாருடைய கால்ஷீட் உள்ளதோ, அவர்களை வைத்து அந்த வாரத்து எபிசோட்டை தேத்தி விடுவார்கள். அதுபோல இந்த படத்தில் கதாநாயகன் ஒரு பெண்ணை காதலிக்கிறார், கதாநாயகி ஒரு பையனை காதலிக்கிறார், கதாநாயகனின் நண்பரின் காதல் கதை ஓடிக்கொண்டு உள்ளது.

மொத்தத்தில் படம்: விக்ராந்த்க்கு ஒரு கதை, இவர்களின் அப்பா அம்மாவுக்கு ஒரு கதை சொல்கிறார்கள், யார் கால் ஷீட் கிடைக்குதோ அப்போது படம் பண்ணிக்கலாம் என்பது போல படத்தை எடுத்து வைத்துள்ளார்கள். இந்த முழு படமுமே இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுத்து போடுவதைப்போலத்தான் உள்ளது. படத்தில் சீரியஸ்னஸோ, டெப்தோ என எதுவுமே இல்லை. இந்த கதையே போதுமான கதைதான். கொஞ்சம் பட்டி - டிங்கர் பார்த்திருந்தால் சுமாரான படமாகவாவது தேத்தி இருக்கலாம். ஆனால் நெருக்கி ஒரு கில்மா படத்திற்கு அருகில் கொண்டு வந்துவிட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X