அபிஷேக் முதல் பாவனி வரை மூஞ்சிக்கு நேரா நோஸ் கட் பண்ணவரா சேஃப் கேம் ஆடுறாரு.. டிரெண்டாகும் #Raju
சென்னை: பிக் பாஸ் வீட்டில் முகத்துக்கு நேராக பேசாமல் மறைத்து விளையாடும் நபர் என இமான் அண்ணாச்சி மற்றும் ராஜு ஜெயமோகன் மீது ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் தண்ணீ ஊத்தி அசிங்கப்படுத்துவதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.
ட்விட்டரில் #Raju ஹாஷ்டேக்கை போட்டு ராஜு பாய்க்கு ஆதரவாக ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
பாவனியின் ஆர்மியினர் ராஜுவை எதிர்த்து கமெண்ட்டுகளை போட ட்விட்டர் சண்டை களைகட்டுகிறது.

பெஸ்ட் என்டர்டெயினர்
ராஜு ஜெயமோகன் மீது அதிருப்தி கொண்டுள்ள ஹவுஸ்மேட்ஸ் அவரை இந்த வாரம் நாமினேட் செய்தனர். இந்த சீசனிலேயே ஹவுஸ்மேட்களையும் ரசிகர்களையும் என்டர்டெயின்மென்ட் செய்து வரும் ராஜுவுக்கு பிக் பாஸ் அவார்ட்ஸ் சிறந்த என்டர்டெயினர் விருது வழங்கி இருந்தனர்.

முதல் நபராக சேவ்
நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள ராஜுவுக்கு ரசிகர்களின் அமோக ஆதரவு இருப்பதை பிக் பாஸ் ஹவுஸ்மேட்கள் இந்த வாரம் அவர் முதல் நபராக சேவ் ஆகி நிரூபிப்பார் என ஏகப்பட்ட ரசிகர்கள் Unofficial polls வைத்து ராஜுவுக்கு அதிக வாக்குகள் வந்திருப்பதை சுட்டிக் காட்டி வருகின்றனர்.

பாவனி ராஜு பஞ்சாயத்து
இமான் அண்ணாச்சி இசைவாணியை முகத்துக்கு நேராக சர்வாதிகாரம் செய்கிறாய் எனக் கூறியுள்ளார். பாவனியை பல முறை ராஜு நோஸ் கட் செய்துள்ளார். அபிஷேக் ராஜா, தாமரை செல்வி, பிரியங்கா என பல ஹவுஸ்மேட்களை ராஜு நேரடியாக பேசியுள்ளார். சண்டை போடமால் நக்கலாக அவர் கலாய்ப்பதை எப்படி சேஃப் கேம் என்று சொல்ல முடியும் என ராஜு ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

பாவனி தான் பெஸ்ட்
பாவனிக்கும் ராஜுவுக்கும் இடையே தான் இந்த சீசனில் கோல்ட் வார் ஆரம்பத்தில் இருந்தே நடந்து கொண்டிருக்கிறது என்றும் ராஜுவின் முகத்திரையை பாவனி தான் அடிக்கடி கிழித்து வருகிறார். அதனால் தான் ராஜுவுக்கு பாவனியை சுத்தமாக பிடிப்பதே இல்லை என பாவனி ரசிகர்கள் பாவனி தான் பெஸ்ட், நீ கலக்கு செல்லம் என கொண்டாடி வருகின்றனர்.

டேஞ்சர் ஜோனில் பாவனி
ராஜுவை தொடர்ந்து எதிர்த்து வருவதால் தான் பாவனி இந்த வாரம் டேஞ்சர் ஜோனுக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றும், மதுமிதாவுக்கு அடுத்த இடத்தில் குறைவான வாக்குகளை அவர் தான் பெற்றுள்ளார் என்றும் கூறுகின்றனர். மேலும், சுருதி வெளியேற காரணமே பாவனி தான் என்றும் அடுத்த பாயாசம் அவருக்கு சீக்கிரமே போடப்படும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











