திருவேற்காடு தாண்டிருச்சு.. இமான் அண்ணாச்சியையே அழ வைத்த ராஜு பாய்.. ஏன்னு பாருங்க!

சென்னை: இமான் அண்ணாச்சியை ராஜு பாய் அழ வைத்த சீன் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.

என்னடா இது அழ வைத்த சீன் வயிறு குலுங்க சிரிக்க வைத்ததுன்னு சொல்றாங்களே என்று யோசிக்காதீங்க.. எல்லாமே ஒரு நடிப்பு தான் பாஸ்.

தான் ஒரு சிறந்த நடிகர் என இயக்குநராக அமர்ந்துள்ள ராஜுவிடம் வாய்ப்பு கேட்டு இமான் அண்ணாச்சி போக அங்கே நடந்த சுவாரஸ்ய டிராமா மூலம் இந்த வாரமும் அண்ணாச்சி ஓட்டுகளை அள்ளி விடுவார் என்பது கன்ஃபார்ம்.

கூட்டத்தில் ஜொலித்தவர்

கூட்டத்தில் ஜொலித்தவர்

இமான் அண்ணாச்சி அவ்வளவு சீக்கிரமாக எல்லாம் இந்த வீட்டை விட்டு வெளியேறுவார் என தெரியவில்லை. அந்தளவுக்கு கேமை நன்றாக புரிந்து கொண்டு விளையாடி வருகிறார். கடந்த வாரம் கூட்டத்தில் ஜொலித்தவர் எனும் பட்டத்தை ராஜு ஜெயமோகன், பிரியங்கா, நிரூப்பை எல்லாம் பின்னுக்குத் தள்ளி கைப்பற்றியவர் இமான் அண்ணாச்சி.

டைம் பாஸ் ஆக்டிங்

டைம் பாஸ் ஆக்டிங்

பிக் பாஸ் வீட்டில் சும்மா இல்லாமல் ஏதாவது கன்டென்ட் கொடுக்கும் விதமாக இமான் அண்ணாச்சி, ராஜு ஜெயமோகன் மற்றும் நிரூப் மூவரும் இணைந்து போட்ட ஆக்டிங் டிராமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அழ வைத்த ராஜு

அழ வைத்த ராஜு

நடிகராக வேண்டும் என இமான் அண்ணாச்சி ராஜு பாயிடம் கூற நல்லா எமோஷனலாக அழணும்.. அப்புறம் அப்படியே திடீரென சிரிக்கணும் என வித்தியாசமான சீன் கொடுக்க இமான் அண்ணாச்சி பண்ண ஆக்டிங் வேற லெவல் நகைச்சுவை விருந்து.

திருவேற்காடு தாண்டிருச்சு

திருவேற்காடு தாண்டிருச்சு

நாபிக் கமழத்தில் இருந்து அழுகையை வரவழைக்க போராடுவது போல இமான் அண்ணாச்சி ரியாக்‌ஷன் கொடுக்க.. உங்களை அழ சொன்னேன்.. அழுகையே வரலையே என ராஜு பாய் கேட்க அதற்கு "திருவேற்காடு தாண்டிருச்சு இதோ வந்துரும்" என இமான் அண்ணாச்சி கொடுத்த கவுன்ட்டர் காமெடி அட்டகாசம்.

ஜாலியா விளையாடுறாரு

ஜாலியா விளையாடுறாரு

மற்ற வயதான போட்டியாளர்கள் போல இல்லாமல் இமான் அண்ணாச்சி இந்த சீசனில் செம ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டு விளையாட்டை விளையாடி வருகிறார் என ரசிகர்கள் அவருக்கு ஓட்டுப் போட்டு இந்த வாரத்திலும் எலிமினேஷனில் இருந்து அவரை நிச்சயம் காப்பாற்றுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சுரேஷ் தாத்தா அளவுக்கு இல்லை

சுரேஷ் தாத்தா அளவுக்கு இல்லை

கடந்த சீசனில் சுரேஷ் சக்கரவர்த்தி இளம் போட்டியாளர்களுக்கு கடும் டஃப் கொடுத்து அவர் இருந்த வரை செம ஸ்போர்ட்டிவாக விளையாடி ஏகப்பட்ட கன்டென்டுகளை கொடுத்து நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை ஏற்றினார். அவர் அளவுக்கு இமான் அண்ணாச்சி விளையாடவில்லை என்றும் ஆனால், இமான் அண்ணாச்சி அவருடைய கேமை சரியாக விளையாடுகிறார் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X