இன்னும் ஒரு நாள் தான் இருக்கு.. இந்த சீசன் பிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யாரு?

சென்னை: நிரூப் புதிதாக ஹேர்கட் செய்தது, ஃபினாலேவுக்கு பின் வாசல் வழியாக வந்தது என ஒருபுறம் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை கடைசி நேரத்தில் மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மறுபுறம் அன் அஃபிஷியல் ஓட்டிங்கில் வியாழக் கிழமையான இன்றும் ரசிகர்களின் பேராதரவுடன் மக்களுக்குப் பிடித்த போட்டியாளர்கள் டாப் இடத்தில் உள்ளனர்.

இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், வியாழன் வரை அன் அஃபிஷியல் ஓட்டிங்கில் யார் எந்த அளவுக்கு வாக்குகளை பெற்றுள்ளனர் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

கடைசி இடத்தில் அமீர்

கடைசி இடத்தில் அமீர்

திங்கட்கிழமை ஓட்டிங் ஆரம்பித்தது முதல் வியாழக்கிழமை வரை தொடர்ந்து நடன இயக்குநர் அமீர் தான் கடைசி இடத்தில் உள்ளார். டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் ஃபைனலிஸ்ட்டாக உள்ளே நுழைந்த அமீர் இதுவரை 11.07% ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெட்டப் மாத்தினாலும்

கெட்டப் மாத்தினாலும்

கெட்டப் மாத்தினாலும் கேரக்டர் சரியில்லையே என்பது போல அந்நியனாக நீண்ட முடியுடன் இருந்த நிரூப் தற்போது ரெமோ போல அழகாக மாறினாலும் பாவனிக்கு கீழ் தான் நிரூப்பின் ஓட்டு விகிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 13.55% ஓட்டுக்களுடன் 4வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார் நிரூப்.

பாவனி பக்கா

பாவனி பக்கா

தனது வாழ்க்கையை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பல அப்ஸ் அண்ட் டவுன்களை சந்தித்து கடைசி வரை ரசிகர்களின் பலத்தால் 3வது இடத்திலேயே தொடர்கிறார் பாவனி. 13.67% ஓட்டுக்களுடன் நிரூப்பை விட சற்றே முன்னிலையில் உள்ளார். இன்னும் ஒரு நாள் மட்டுமே ஓட்டுக்கள் பதிவாகும் சூழலில் நிரூப் ஆர்மியினர் நிரூப்பை முந்த வைப்பார்களா? அல்லது பாவனி ஆர்மியினர் பாவனியை டாப்புக்கு கொண்டு செல்வார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்ந்து இரண்டாவது இடம்

தொடர்ந்து இரண்டாவது இடம்

பிரியங்கா பிக் பாஸ் வீட்டிலேயே இல்லை என்று இன்றைய புரமோக்களில் அவரை காணாத ரசிகர்கள் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பிரியங்கா ஒய்வெடுத்து வருகிறார் என்றும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வில்லை என்றும் பிரியங்கா ரசிகர்கள் நம்பி வருகின்றனர். இன்றைய எபிசோடை பார்த்தால் தான் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 19.7% வாக்குகளுடன் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளார் பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

முதலிடத்தில் ராஜு

முதலிடத்தில் ராஜு

பிரியங்காவை விட 2 மடங்கு அதிக வாக்குகளை பெற்று தொடர்ந்து யாருமே தொட முடியாத முதலிடத்தில் நீடிக்கிறார் ராஜு ஜெயமோகன். 40 சதவீதத்தில் இருந்து 42.01 சதவீதமாக ராஜுவின் ஓட்டுக்கள் உயர்ந்துள்ளன. இந்த சீசன் டைட்டிலை ராஜு ஜெயமோகன் தான் வெல்வார் என்பது உறுதியாகி உள்ளது. வரும் சனிக்கிழமை நடக்கப் போகும் கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்கில் இறுதி முடிவு தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X