Don't Miss!
- News
அந்த 7 மணி நேரம்.. மேஜையில் பைல்களை எடுத்து வைத்த எடப்பாடி.. யார் அந்த ஒருவர்? பறந்து வந்த உத்தரவு
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பாவனி சமைக்கும் போது யாருமே பக்கத்தில் இருக்கக் கூடாது.. சைக்கிள் கேப்பில் கிடா வெட்டிய ராஜு பாய்!
சென்னை: அக்ஷராவுக்கு அதிகம் சப்போர்ட் செய்து வரும் ராஜு ஜெயமோகன் பாவனிக்கு கிடைத்த கேப்பில் ஆப்பு வைத்து விட்டார்.
ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் கமல் சார் எந்த பஞ்சாயத்தை கையில் எடுப்பது என்றே தெரியாமல் இருந்த நிலையில், கடைசியாக காட்டப்பட்ட உப்பு மேட்டரை கையில் எடுத்து பஞ்சாயத்தை ஆரம்பித்தார்.
பேய்
படங்களில்
ட்ரெண்டிங்கை
ஏற்படுத்திய
பீட்சா
படம்...
9
ஆண்டு
கொண்டாட்டம்!
இமான் அண்ணாச்சி பாவனி சமையல் குறித்து வைத்த விமர்சனம் மிகப்பெரிய பஞ்சாயத்தாக மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்கள்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அனல் பறக்க ஓடிக் கொண்டிருக்க ஒட்டுமொத்த ரசிகர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு லீவு கொடுத்து விட்டு கிரிக்கெட்டை பார்த்து வருகின்றனர். அபிஷேக் ராஜாவும் வெளியேறி விட்டார் என்பது முன்பே கசிந்து விட்ட நிலையில், சன் டே எபிசோடு சோபிக்கவில்லை.

சமையல் பஞ்சாயத்து
என்ன தான் கிரிக்கெட் போட்டி தீவிரமாக ஓடிக் கொண்டிருந்தாலும், நாம நம்ம வேலையை செய்யணுமே என பிக் பாஸ் குழு சன் டே எபிசோடில் பெரிதாக கவனம் செலுத்தாமல் சமையல் பஞ்சாயத்தை கொடுத்து கமல் சாரை பேச வைத்துள்ளது. அவரும் போட்டியாளர்களை நீண்ட நேரம் அந்த உப்பு சப்பு இல்லாத விஷயத்தையே பேச விட்டு வேடிக்கை பார்த்தார்.

அண்ணாச்சி சொன்ன குறை
சமையல் டீம் இந்த வாரம் செய்த சமையல் கொஞ்சம் போதுமானதாக இல்லை என இமான் அண்ணாச்சி சொன்ன கருத்தை பிரியங்கா, அபிஷேக் உள்ளிட்டோர் பெரிய பஞ்சாயத்தாகவே மாற்றினர். ராஜு பாய் கடைசி வரைக்கும் இமான் அண்ணாச்சிக்காக இந்த விஷயத்தில் சப்போர்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

உடம்பு சரியில்லை
இந்த வாரம் கிச்சன் டீமில் கேப்டனாக இருந்த ராஜுவை இமான் அண்ணாச்சி கேள்வி கேட்காமல் என்னையே ஏன் கேட்கிறார் என கண்ணை கசக்க இடை மறித்து பேசிய ராஜு பாய் தனக்கு 4 நாட்களாக உடல் நிலை சரியில்லை என்பதால் கிச்சனுக்கே அதிகமாக போவதை அவாய்டு பண்ணிட்டேன் என எஸ்கேப் ஆனார்.

பாவனிக்கு பிடிக்காது
ஆனால், தொடர்ந்து பாவனி பற்றி கமல் கேட்க, பாவனி சமைக்கும் போது யாரையும் கிட்ட சேர்க்க மாட்டாங்க சார் என சைக்கிள் கேப்பில் கெடா வெட்டி ஸ்கோர் செய்து விட்டார் ராஜு பாய். பாவனி மற்றவர்களை கூட சேர்க்காமல் சமையலில் சொதப்பி விட்டு இமான் அண்ணாச்சி பேசியதுக்கு எதிராக கூட்டத்தை சேர்ந்து பிரச்சனையை கிளப்பி உள்ளார் என்பதை ராஜு பாய் மறைமுகமாக சுட்டிக் காட்டி விட்டார்.