பிக் பாஸ் வீட்ல பிரைவேட்டா ஒரு ஏரியா சொல்லுங்க பேசுறேன்.. பிரியங்காவை பங்கம் பண்ண ராஜு பாய்!
சென்னை: தாமரை எந்தளவுக்கு சீண்டினால் ராஜு கோபப்படுவார் என நன்காக புரிந்து வைத்துக் கொண்டு கேம் ஆடி வரும் பிரியங்காவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே இந்த முதல் புரமோ பார்க்கப்படுகிறது.
எத்தனை முறை பிரியங்கா காது கிழிய கத்தினாலும் சிபி சொல்வது போல சில சமயம் காது கேட்காதவர் போலவே இருந்து விடணும் என்பதை ராஜு தொடர்ந்து பின் பற்றி வந்த நிலையில், இன்றைய முதல் புரமோவில் பிரியங்காவை எதிர்த்து பேசி உள்ளார்.
பிரியங்காவை பிடிக்கும் என ராஜு தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்தாலும் ராஜுவை காலி பண்ணுவது தான் பிரியங்காவின் ஒரே நோக்கம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்கா vs ராஜு
கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரி vs பாலா என நேரடி மோதலாக இருந்த நிலையில், இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரியங்கா vs ராஜு என மறைமுக மோதலுடன் அரங்கேறி வருகிறது. பிரியங்கா டீமுக்கு எதிராக ராஜு டீமும் ராஜு டீமுக்கு எதிராக பிரியங்கா டீமும் தொடர்ந்து போட்டி போட்டு விளையாடி வருகின்றனர்.

வன்ம பிரசாரம்
பிரியங்கா உரக்கச் சொல், உண்மையை சொல் எனக் கூறி பிரசாரம் செய்தாலும் அவருடைய பிரசாரத்தில் முழுக்க முழுக்க வன்மமே நிறைந்து காணப்படுவதாகவும், பாசிட்டிவிட்டி என ஆரம்பத்தில் சொன்ன பிரியங்காவின் உண்மை முகம் அப்படியே வெளுத்து காணப்படுவதை தான் 66 நாட்களும் பார்க்க முடிந்தது என பிரியங்கா ஹேட்டர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பிரியங்காவுடன் மோதல்
எந்தவொரு பிரச்சனைக்கும் செல்ல வேண்டாம் என சைலன்ட் கேம் ஆடி வருகிறார் என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ள ராஜு பிரியங்காவை எதிர்த்து கேள்வி கேட்கும் அசத்தலான முதல் புரமோ வந்துள்ளதாக ராஜு பாய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பிரைவேட்டா ஒரு ஏரியா சொல்லுங்க
பிரியங்கா பப்ளிக்கா யார் மனதை வேண்டுமானால் புண்படுத்தலாம். ஆனால், ராஜு ஒரே ஒரு விஷயத்தை பப்ளிக்காக சொல்லக் கூடாது என பிரியங்கா பேச பிக் பாஸ் வீட்டில் பிரைவேட்டா ஒரு ஏரியா சொல்லுங்க.. அங்க வச்சி பேசுறேன் என ராஜு ஜெயமோகன் பிரியங்காவை பங்கமாக கலாய்த்து விட்டார் என அக்ஷராவை போலவே ஆடியன்ஸும் கைதட்டி வருகின்றனர்.

பாவனி யாருக்கு சப்போர்ட்
இந்த விவகாரத்தில் பாவனி ராஜுவுக்கு எதிராகத் தான் பேசி இருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், அவர் பேசியதை கொஞ்சம் கூட அவருக்கு முக்கியத்துவம் கொடுக்காதபடி பிக் பாஸ் எடிட்டர் மியூட் போட்டு கட் பண்ணியதை பார்த்து ரசிகர்கள் சற்றே குழம்பிப் போயுள்ளனர்.


Click it and Unblock the Notifications











