பெஸ்ட் என்டர்டெயினர், மிக்சர், டம்மி பீஸ்.. ஏறி மிதிச்சுட்டு போக ரெடியாகிட்டாரு ராஜு!
சென்னை: அபிநய், இசைவாணி உள்ளிட்டோருக்கு ராஜு ஜெயமோகன் மீது அப்படி என்ன காண்டு என பிக் பாஸ் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
பிக் பாஸ் விருதுகள் என்கிற டாஸ்க்கை ஆரம்பித்து சும்மா இருப்பவர்களை வெறிபிடித்த மிருகங்களாக சீண்டி விட்டுள்ளார் பிக் பாஸ்.
பெஸ்ட் என்டர்டெயினர், புடுங்குறது பூரா தேவையில்லாத ஆணி, மிக்சர் தின்பவர், டம்மி பீஸ் என விருதுகளை கொடுத்து ராஜு பாயை கடுப்பாக்கி உள்ளனர் ஹவுஸ்மேட்ஸ்.

பிக் பாஸ் விருதுகள்
என்ன போட்டியாளர்கள் எல்லாம் இன்னமும் சண்டை போடாம இருக்காங்க.. அப்புறம் எப்படி கமல் சார் வந்து ஏன் இப்படி சண்டை போடுறீங்கனு கேட்க முடியாமல் போய்விடுமே என நினைத்து பிக் பாஸ் விருதுகள் எனும் நிகழ்ச்சியை நடத்தி நாரதர் வேலையை நல்லாவே பண்ணி உள்ளார் பிக் பாஸ்.

வெளியேறும் வெறுப்பு
இமான் அண்ணாச்சிக்கு இசையை பிடிக்காது என்பது, இசைக்கு இமான் அண்ணாச்சியை பிடிக்காது என்பது, பாவனிக்கு அக்ஷராவை பிடிக்காது, இசை, அபிநய்க்கு ராஜுவை பிடிக்காது என அனைத்து வெறுப்புகளும் பிக் பாஸ் விருதுகள் மூலமாக வெளியேறி உள்ளது.

குழப்பமான ராஜு
பெஸ்ட் என்டர்டெயினர் எனும் விருதை அதிக எண்ணிக்கையிலான ஹவுஸ்மேட்கள் இணைந்து ராஜு பாய்க்கு கொடுத்த நிலையில், புடுங்குறது பூரா தேவையில்லாத ஆணி, மிக்சர் தின்பவர், டம்மி பீஸ் என விருதுகளை கொடுத்து ராஜு பாய்க்கே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

தேவையில்லாத ஆணி
ராஜு ஜெயமோகனுக்கு புடுங்குறது பூரா தேவையில்லாத ஆணி விருதை இசைவாணி கொடுக்க காரணமே ராஜு இமானுக்கு சப்போர்ட் செய்வது மட்டும் தான். அந்த விருதை பெற்றுக் கொண்டு இனிமே தேவையுள்ள ஆணி புடுங்கப்படும் என ராஜு சொன்ன கமெண்ட் ரசிகர்களை சிரிக்க வைத்தது.

இதுல யாரு டம்மி பீஸ்
ராஜுவுக்கு அபிநய் டம்மி பீஸ் விருது கொடுத்ததை பார்த்து அத்தனை ரசிகர்களும் கடுப்பாகி விட்டனர். இதுவரை பிக் பாஸ் வீட்டில் டம்மி பீஸாக இருந்து வரும் ஜெமினி கணேசன் பேரன் அபிநய் ராஜுவுக்கு இப்படியொரு விருதை கொடுக்கலாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஏறி மிதிக்கப் போறேன்
பெஸ்ட் என்டர்டெயினர் விருது கொடுக்கும் போது நல்லா இருந்துச்சு.. அப்புறம் இப்படி புடுங்குறது பூரா தேவையில்லாத ஆணி, மிக்சர் தின்பவர், டம்மி பீஸ் என விருதுகளை நீங்கள் கொடுப்பதை பார்த்து இனிமேல் அமைதியா இருக்கக் கூடாது யாரையாவது ஏறி மிதிச்சிட்டு போயிட்டு இருக்கணும்னு தோணுது.. யாரையாவது இனி ஏறி மிதிச்சால் மன்னிச்சுடுங்க என எச்சரிக்கை கொடுத்து தனது ஆட்டத்தை தொடங்க காத்திருக்கிறார் ராஜு.


Click it and Unblock the Notifications











