இதுவரைக்கும் எதிலுமே ஜெயிச்சது இல்லை.. இப்போ ஜெயிக்க வைங்க.. ரசிகர்களிடம் ஓட்டுக் கேட்ட ராஜு!

சென்னை: கோல்டன் மைக் கொடுத்து ஒவ்வொரு ஃபைனலிஸ்ட்டையும் தங்களுக்கான ஓட்டுக்களை சேகரிக்க கன்ஃபெஷன் ரூமில் ஒரு பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் பிக் பாஸ்.

இதுவரை போட்டியாளர்கள் கேட்காமல் இருந்த போதே ஓட்டுக்களை மக்கள் போட்டு வந்த நிலையில், மக்களுக்கு நன்றி தெரிவித்து போட்டியாளர்கள் வாக்கு சேகரித்த விதம் அருமை.

இதுவரைக்கும் எதிலுமே ஜெயிச்சது இல்லை என சொல்லி ராஜு ஓட்டுக் கேட்டதை பார்த்த ரசிகர்கள் நீ கேட்க வேண்டாம் பாய் நாங்களே போட்டு விடுகிறோம் என ரசிகர்கள் ஓட்டுக்களை குவித்து வருகின்றனர்.

செம கவனிப்பு

செம கவனிப்பு

இத்தனை வாரங்களும் பெரிதாக ஒன்றுமே இந்த ஹவுஸ்மேட்கள் செய்யாத நிலையில், கடைசி வாரத்தில் மட்டும் ஏன் கஷ்டப்படுத்துவானே என பிக் பாஸே நினைத்து விட்டார் போல.. காலையிலேயே ருசியான டிபன் உடன் செம கவனிப்பு நடைபெற்ற நிலையில், சிகை அலங்காரம், மேக்கப் என போட்டியாளர்கள் பக்காவாக கிராண்ட் ஃபினாலேவுக்கு தயாராகி விட்டனர்.

கோல்டன் மைக்

கோல்டன் மைக்

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியாளர்களுக்கு ஒரு கோல்டன் ஆப்பர்ச்சுனிட்டி போல கோல்டன் மைக்கை கொடுத்து நீங்களே ரசிகர்களிடம் உங்களுக்கான இந்த வார ஓட்டுக்களை கேட்டு வாங்கிக்கோங்க என சொல்லி விட்டார். போட்டியாளர்களும் கன்ஃபெஷன் ரூமிற்குள் சென்று தாங்கள் கடந்த வந்த பாதைகளை சொல்லி ஓட்டுக்களை கேட்க ஆரம்பித்தனர்.

மன்னிச்சுடுங்க

மன்னிச்சுடுங்க

எல்லாருமே எல்லா விதத்திலும் சரியானவர்களாக இருக்க முடியாது. நானும் 100 சதவீதம் சரியானவன் என சொல்லவில்லை. நான் எனக்கு அந்த நேரத்தில் என்ன பட்டதோ அதை பேசியிருக்கிறேன். சில பேருக்கு அது தப்பாகவோ தவறாகவோ பட்டால் அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என பாவனி விஷயம் பற்றி மறைமுகமாக பேசி மன்னிப்பு கேட்டு விட்டார் ராஜு.

வாய்ப்பு தேடி அலைந்தேன்

வாய்ப்பு தேடி அலைந்தேன்

சென்னைக்கு கிளம்பி வந்ததும் வாய்ப்புக்காக ஏதாவது ஒரு கம்பெனிக்கு போட்டோ கொடுக்கும் போது கண்டிப்பா கூப்பிடுறேன்பா என சொல்வார்கள், அதுவே எனக்கு ஏதோ பெரிய விஷயத்தை சாதித்தது போல அம்மாவுக்கு எல்லாம் போன் பண்ணி சொல்வேன். ஆனால், கடைசியில் அப்படி சொன்னால் எந்த வாய்ப்பும் தரமாட்டாங்கன்னு புரிந்து கொண்டேன் என உருக்கமாக பேசினார்.

ஜெயிச்சது இல்லை

ஜெயிச்சது இல்லை

இதுவரை எந்தவொரு விஷயத்திலும் வாழ்க்கையில் ஜெயிச்சது இல்லை. படிப்பில் இருந்து வேலை வரை பல தோல்விகளை சந்திச்சிருக்கேன். ஒவ்வொரு வாரமும் நீங்க ஓட்டுப் போட்டு என்னை காப்பாற்றி வந்தது எனக்கு பெரிய சந்தோஷம். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். இந்த வாரமும் அதிக வாக்குகளை போட்டு என்னை ஜெயிக்க வைப்பீங்கன்னு எதிர்பார்க்குறேன். ஜெயிக்குற சந்தோஷத்தை பார்க்கணும்னு நினைக்கிறேன் என ராஜு ஓட்டுக் கேட்டார்.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 11th January 2022 - Promo 2| ஒரு நாள் Bigg Boss-ஆகா மாறிய Amir
ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

இந்த சீசனில் பிக் பாஸ் ரசிகர்களின் அதிகப்படியான ஆதரவு ராஜுவுக்கே இருக்கிறது. திங்களன்று அன் அஃபிஷியல் போலிங்கிலேயே 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ராஜுவுக்கே ஓட்டுப் போட்டு வராங்க.. ஜெயிக்கப் போறது ராஜு தான் நாம ஏன் நம்மளோட ஓட்டுக்களை வேஸ்ட் பண்ண வேண்டும் என்று நினைத்தும் சிலர் ராஜுவுக்கு ஓட்டுக்களை குவித்து வருகின்றனர். ராஜு தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவி வேறு பிளானை வைத்தால் நிச்சயம் சிக்கல் ஆகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X