பாக்ஸ் ஆபீஸில் பஞ்சரான பிக் பாஸ் ராஜு.. பன் பட்டர் ஜாமுக்கே இந்த நிலைமைன்னா மற்ற படங்கள்?
சென்னை: தமிழ் சினிமாவில் நேற்று பன் பட்டர் ஜாம், கெவி, டிரெண்டிங், யாதும் அறியான், ஆக்கிரமிப்பு, சென்ட்ரல், ஜென்ம நட்சத்திரம், காலம் புதிது, இரவுப் பறவை உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின. இதில், மக்களுக்கு பரீட்சையமானவர்கள் நடித்த படம் என்றால் அது பன் பட்டர் ஜாம் தான். ஆனால், அந்த படமே சூர்யா சேதுபதி நடித்த பீனிக்ஸ் படத்தை விட பாக்ஸ் ஆபீஸில் குறைவான வசூலை முதல் நாளில் அள்ளியிருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இத்தனை படங்களை எடுத்த தயாரிப்பாளர்கள் அத்தனை கோடிகளை ஒன்றாக சேர்த்து வேறு ஒரு தொழில் முதலீடு செய்திருந்தால் தான் பெரிய லாபத்தை பார்த்திருப்பார்கள் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

எப்படியாவது சினிமாவில் சாதித்து பெரிய ஆளாக வேண்டும் என தொடர்ந்து பல சிறு பட்ஜெட் படங்களை எடுத்து வரும் தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வந்தாலும், அவர்களுக்கு திரையரங்க வசூல் வெற்றி என்பது வெறும் கனவாகவே உள்ளது என்கின்றனர்.
பாசிட்டிவ் விமர்சனங்கள்: பிக் பாஸ் ராஜு ஹீரோவாக நடித்த பன் பட்டர் ஜாம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ராஜு ஜெயமோகன், பாவ்யா, ஆதியா என 2 இளம் ஹீரோயின்கள் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர். சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்ளி, விக்ராந்த், விஜய் டிவி பப்பு என பலர் நடித்த அந்த படத்துக்கு படம் பார்க்க நல்லா இருக்கு, ஜாலியாக சிரித்து மகிழலாம் என்றே பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால், பாக்ஸ் ஆபீஸில் படம் பஞ்சராகி விட்டது.
முதல் நாள் வசூல்: இயக்குநர் ராகவ் மிர்தத் இயக்கத்தில் ராஜு ஜெயமோகன் நடித்த பன் பட்டர் ஜாம் திரைப்படம் முதல் நாளில் வெறும் 20 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக Sacnilk இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வசூல் சற்றே அதிகரிக்கும் என்றும் ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு கோடி ரூபாய் கூட இந்த படம் வசூல் செய்வதே சிரமம் தான் என்றும் கூறுகின்றனர்.

மற்ற படங்களின் நிலைமை: பன் பட்டர் ஜாம் படத்தின் நிலைமையே இப்படி இருக்கும் போது கலையரசன் நடித்த டிரெண்டிங் திரைப்படம், கெவி திரைப்படம், பேய் படமான ஜென்ம நட்சத்திரம் மற்றும் மற்ற சிறு பட்ஜெட் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலைமை அந்தோ பரிதாபம் என்று தான் கூறுகின்றனர். இப்படியே சென்றால் தமிழ் சினிமாவின் நிலைமை ரொம்பவே மோசமாகி விடும் என்கின்றனர்.
தலைவன் தலைவி, மாரீசன் காப்பாற்றுமா?: அடுத்த வாரம் வெளியாகவுள்ள வடிவேலு, பகத் ஃபாசில் நடித்த மாரீசன் மற்றும் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள தலைவன் தலைவி உள்ளிட்ட 2 படங்கள் தான் தமிழ் சினிமாவை இந்த ஜூலை மாதம் காப்பாற்ற வேண்டும் என்கின்றனர். கண்டிப்பாக ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து அந்த படங்களை பார்ப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படங்களும் கை விரித்து விட்டால், அடுத்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் தான் கடைசி நம்பிக்கை என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











