நீ எதுக்கு இங்க வந்த.. அதை செய்…தாமரைக்கு சூப்பர் அட்வைஸ் கொடுத்த ராஜு !

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி 26வது நாளை கடந்து பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.

அபிஷேக் இந்த வீட்டை விட்டு சென்ற, இந்த நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்து விடும், விறுவிறுப்பு இருக்காது என்று நினைத்தவர்களுக்கு தாமரை செல்வி கண்டென்ட் கொடுத்து வருகிறார்.

ஸ்ருதி, தாமரையின் காயினை எடுத்ததிலிருந்து வீடிடே ரணகளதாக மாறி உள்ளது. எதாவது சாக்குகிடைத்தால் போதும் தாமரை சண்டைக்கு தயராகி விடுகிறார்.

கிராமமா… நகரமா

கிராமமா… நகரமா

பிக் பாஸ் வீட்டில் ஊரு விட்டு, ஊரு வந்த தலைப்பில் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில், கிராமத்து அணி, நகரத்து அணி என இரு அணிகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் பட்டிமன்றம் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பிக் பாஸ் வீட்டின் உருவம் பொறித்த பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

எது நியாயம்

எது நியாயம்

பிக் பாஸ் நிகழ்ச்சியை புரிந்து விளையாடுவது கிராமத்து மக்களா? நகரத்து மக்களா? என்று தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், பேசிய பிரியங்கா, நகரம் தான் கெத்து என்றும் இதுவரை நடந்து முடிந்த டாஸ்க்கில் நகரத்து மக்களிடமே அனைத்து காயின்களும் இருக்கு என பேசினார். இதனால், ஆத்திரம் அடைந்த தாமரை அநியாயமா விளையாடிட்டு இப்படி பேசுவது முறை இல்லை என சண்டையிடுவது போல கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்.

அடுத்த வாரம் சிரிக்க வை

அடுத்த வாரம் சிரிக்க வை

இதையடுத்து, கார்டன் ஏரியாவில் அமர்ந்து இருந்த தாமரையிடம் பேசிய ராஜு , அவங்க காயினை எடுத்தது தப்புதான் இதற்கு இந்த வாரத்தில் முடிவு வந்துவிடும் நீ அடுத்த வாரத்தில் இருந்து அனைவரையும் சிரிக்க வைக்க, மகிழ்விக்க வேண்டும் என்றார். சினிமாவில் காமெடி செய்ய வேண்டும் என்பது தானே உன்னுடைய ஆசை என்கிறார். இதற்கு தாமரை நான் நாடகத்திலேயே போட்டுகிறேன் என்றார்.

நீ இங்கே எதற்கு வந்த

நீ இங்கே எதற்கு வந்த

உடனே பேசிய ராஜூ நீ ரொம்ப தெரியாம பேசுற, ஓரளவுக்குத்தான் சகித்துக் கொள்ள முடியும். இது ஒரு மேடை இங்க நீ வந்து இருக்க, இங்க இருந்து நீ வளர்ந்து வெளியில் வர வேண்டும். நீ என்ன நோக்கத்துல இங்க வந்து இருக்க அதை செய். அவங்க செய்தது தப்புத்தான் அதை எங்க சொல்லனுமே அங்க சொல்லு.

ராஜு அட்வைஸ்

ராஜு அட்வைஸ்

அவங்க பேசுறாங்கனு நானும் பேசுவேணு பேசாதே, இவ என்னடா கத்திக்கிட்டே இருக்கா என்கிற எண்ணம் வந்துவிடக்கூடாது. பட்டிமன்றத்தில் பயன்படுத்தும் வார்த்ததையைவா நீ பயன்படுத்துறே என்று தாமரையிடம் பல கேள்விகளை கேட்டார் ராஜு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X