ரஜினிக்கு பிறகு தமிழ்ல நவாசுதீன் சித்திக்கி கால்ஷீட் கொடுக்கப்போறது இவருக்குத்தான்!

சென்னை: இயக்குனர் ராஜுமுருகன் நவாசுதீன் சித்திக்கியை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகன் தற்போது ஜிப்ஸி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.

Raju Murugan directs Nawazuddin Siddiqui?

சமீபத்தில் மும்பை சென்ற ராஜு முருகன் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கியை சந்தித்துள்ளார். அப்போது, ஜோக்கர் திரைப்படத்தை பாராட்டிய சித்திக்கி, அப்படம் மொழிகளைத் தாண்டி தனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்தால், கலை ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறும் எனப் பாராட்டியுள்ளார்.

மேலும், தென் இந்திய சினிமாவில் அதிகமாக அரசியல் பேசும் படங்கள் வருகின்றன என்றும் பாராட்டியுள்ளார். நவாசுதீன் சித்திக்கி இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இரண்டு ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

நவாசுதீன் சித்திக்கியை இயக்கும் அந்த அற்புத நாளுக்காக காத்திருப்பதாக ராஜு முருகன் தெரிவித்துள்ளார். ஜிப்ஸி திரைப்படத்திற்கு பிறகு, ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை படமாக எடுக்க உள்ளார் ராஜுமுருகன்.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு நவாசுதீன் சித்திக்கியை வைத்து ஜோக்கர் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X