எனக்கா கேம் ஆட தெரியாது.. சவால் விட்ட பாவனியை பந்தாடிய ராஜு.. அழுகை டிராமாவை ஆரம்பித்த பாவனி!

சென்னை: நிரூப் மற்றும் சஞ்சீவ் டின்னர் கேம் போலவே பேசியே ஒருவரை வெளியே அனுப்பிடுங்க என்று சொன்ன நிலையில், தாமரை செல்வி அதெல்லாம் வேண்டாம் கேம் ஆடி பார்த்து விடலாம் என சொல்ல பிக் பாஸ் வீட்டில் பிரளயம் வெடித்தது.

ஆரம்பத்தில் காமெடி செய்து கொண்டிருந்த ராஜு பாவனியின் முட்டைகளை உடைக்க தீர்மானிக்க வெடித்தது பிரச்சனை.

ராஜுவை கேம் ஆட மாட்டேங்கிறார் என பாவனி வெறுப்பேற்றிய நிலையில், பாவனியை பாடாய் படுத்தி விட்டார் ராஜு.

பாவனி முட்டை காலி

பாவனி முட்டை காலி

ராஜு கேம் ஆடாமலே இதுவரை வந்து விட்டார் என டின்னர் டாஸ்க்கின் போது பாவனி பேசிய நிலையில், பாவனியின் முட்டைகளை உடைக்க தீர்மானித்து களத்தில் குதித்தார் ராஜு. பாவனியை தான் ராஜு நாமினேட் செய்து வரும் நிலையில், அவருக்கு எதிரான போட்டியை ஆரம்பித்தார்.

புஷ் பண்ணாத

புஷ் பண்ணாத

பாவனியை அலேக்காக பொம்மை போல தள்ளி விட்டு சோபாவில் அமர வைத்து அசால்ட்டாக ராஜு ஹேண்டில் பண்ண பாவனியால் ராஜுவின் அட்டாக்கை தாக்கு பிடிக்க முடியவில்லை. முட்டைகள் உடைக்கப்பட்ட நிலையில், அப்செட் ஆகி விட்டார் பாவனி.

அழுது கொண்டே வெளியேறினார்

அழுது கொண்டே வெளியேறினார்

ராஜு மற்றும் சிபி இருவரும் இணைந்து வந்து தன்னை தாக்குவதாக நினைத்துக் கொண்ட பாவனி தனது எஞ்சி இருந்த முட்டைகளை தாமரை மற்றும் பிரியங்காவுக்கு கொடுத்து விட்டு போட்டியில் இருந்து அழுது கொண்டே வெளியேறினார். நிரூப் சமாதானப்படுத்த மீண்டும் ஆட வந்தார்.

ராஜு தப்பா விளையாடல

ராஜு தப்பா விளையாடல

ராஜு தன்னுடன் தப்பாக விளையாடினார் என பாவனி அழ ஆரம்பித்த நிலையில், ராஜு தப்பாக விளையாடவில்லை. அமீர் மற்றும் அக்‌ஷரா எப்படி விளையாடினார்கள். அதே போலத்தான் என பிரியங்கா பாவனிக்கு சரியான விளக்கத்தை கொடுத்தார்.

பாவனி அவுட்

பாவனி அவுட்

ராஜுவின் முட்டைகளை உடைக்க முடியாத விரக்தியில் போகிற போக்கில் சும்மா இருந்த சஞ்சீவின் முட்டைகளை பாவனி உடைக்க ராஜு மற்றும் சஞ்சீவ் சேர்ந்து பாவனியின் அனைத்து முட்டைகளையும் உடைத்து நொறுக்கினர். அதன் காரணமாக பாவனி இந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் இருந்து வெளியேறினார்.

மன்னிப்பு கேட்ட ராஜு

மன்னிப்பு கேட்ட ராஜு

பாவனியிடம் ஹார்ஷாக நடந்து கொள்வது ராஜுவுக்கே கஷ்டமாக இருந்தது. இதன் காரணமாகவே ஒவ்வொரு கேமிலும் விட்டுக் கொடுத்து சென்ற ராஜுவை அதை வைத்தே கிண்டல் அடித்த நிலையில், கடுப்பாகி பாவனியை பந்தாடி விட்டார். ஆனால், மனம் கேட்காமல் பாவனியிடம் ராஜு மன்னிப்பு கேட்க அதை மதிக்காமல் பாவனி கடந்து சென்றார்.

அமீர் கண்களில் ரத்தக் கண்ணீர்

அமீர் கண்களில் ரத்தக் கண்ணீர்

பாவனியை ராஜு புஷ் பண்ணி விரட்டி அடிப்பதை பார்த்து பாவனி பின்னாடி லவ் மூடில் சுற்றித் திரிந்த அமீரின் கண்களில் ரத்தக் கண்ணீரே வடிந்தது. இறுதியாக பாவனி அழுது கொண்டே அமீரை கட்டிப்பிடிக்க அமீர் பாவனிக்கு ஆறுதல் தந்தார். பாவனி பின்னாடி ஃபோகஸ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு பாவனி பின்னாடியே ஃபோகஸ் பண்றீங்களே அமீர் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்ந்து மோதுவாரா ராஜு

தொடர்ந்து மோதுவாரா ராஜு

இதுவரை நிரூப், பாவனி மற்றும் தாமரை வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்த சுற்றில் ராஜுவை வீழ்த்த அமீர் போட்டி போடுவார் என தெரிகிறது. பாவனியிடம் மோதியதை போலவே அமீர் அல்லது மற்ற போட்டியாளர்களிடமும் ராஜு மோதி வெல்வாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X