அப்பா அம்மா மேல சத்தியம் செய்த அக்ஷரா.. எல்கேஜி பசங்க பிராமிஸ் மாதிரி ஆகிடுச்சே.. சூப்பர் ராஜு!
சென்னை: ராஜு அண்ணாவிடம் இனிமே என் வாழ்க்கையிலேயே பேச மாட்டேன் என தன் அம்மா மற்றும் அப்பா மீது எல்லாம் சத்தியம் செய்த அக்ஷராவை ஓவர் நைட்டில் பேசி சரி செய்து விட்டார் ராஜு.
அக்ஷராவுடன் இணைந்து விளையாடி வந்த ராஜுவை ஏமாற்றி அபிநயை காப்பாற்ற அக்ஷரா ராஜுவின் பலூனை உடைக்க கடுப்பான ராஜு அக்ஷராவின் பல பலூன்களை போட்டியில் இருந்து அவுட் ஆன பிறகு உடைத்தது அக்ஷராவை ஆத்திரம் அடைய செய்தது.
அடுத்த நிகழ்வாக அக்ஷராவின் முகத்திற்கு மேல் டைஸில் ஏறி அமர்ந்தது பிரச்சனையை பிரளயம் ஆக்கி வைத்தது.

எலைட் கேர்ள்
பிக் பாஸ் வீட்டின் எலைட் கேர்ளாக தொடர்ந்து அக்ஷரா தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். பிடிக்காதவர்களிடம் சோஷியல் டிஸ்டன்ஸ் உடனும் பிடித்தவர்களுடன் குறும்புக்கார பெண்ணாகவும் பழகி வருகிறார். வருண் உடன் அதிகம் நட்பாக இருக்கும் அக்ஷரா ராஜுவை அண்ணனாகவே பார்த்து வருகிறார்.

ராஜு மீது கோபம்
ராஜு மீது அந்த அளவுக்கு பாசம் வைத்துள்ள அக்ஷரா விளையாட்டுக்காக ராஜுவை அவுட் ஆக்க கடுப்பான ராஜு அக்ஷராவின் பலூன்களை உடைக்க இருவருக்கும் இடையே பயங்கர சண்டை வெடித்தது. பிக் பாஸ் வீட்டில் மத்த யாரிடமும் காட்டாத கோபத்தை என் மீது மட்டும் ஏன் காட்டுகிறாய் என கத்த தொடங்கி விட்டார்.

அப்பா அம்மா மீது சத்தியம்
பலூன் டாஸ்க்கை தொடர்ந்து டைஸ் டாஸ்க்கிலும் ராஜு டைஸ் மீது ஏறி உட்கார ராஜுவை தனது வலிமையால் கீழே தள்ளி விட்டதும் அது அக்ஷராவுக்கே கஷ்டத்தை கொடுத்தது. இப்படி ஏறி உட்கார்ந்தா அப்புறம் எப்படி விளையாடுறது என கேட்க ஆரம்பிக்க ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற அக்ஷரா தனது அப்பா மற்றும் அம்மா மீது சத்தியமாக இனிமேல் ராஜுவிடம் பேசவே மாட்டேன் என பயங்கரமாக சத்தியம் செய்தார்.

சாந்தப்படுத்திய ராஜு
அக்ஷரா விளையாட்டுக்காக பண்ணதால் கடுப்பான ராஜு அந்த கோபத்தை வெளிக்காட்ட அக்ஷராவுக்கும் ராஜுவுக்கும் இடையே சண்டை வெடித்த நிலையில், அதனை அப்போதே சரி செய்ய நினைத்த ராஜு தொடர்ந்து அக்ஷராவை சாந்தப்படுத்தும் முயற்சியில் இறங்கி அன்று இரவே சமாதானப்படுத்தி விட்டார்.

இமான் இல்லை
ஏதாவது ஒரு டாஸ்க்கை முடித்து விட்டு அது பற்றி இமான் அண்ணாச்சி உடன் பேசி என்னை ஃப்ரீ ஆக்கி விடுவேன். ஆனால், அவர் இப்போது இல்லை. நான் யாரிடம் பேச, உன்னை கஷ்டப்படுத்திட்டு நாம் போய் நிம்மதியா போய் தூங்க முடியல. நான் நிம்மதியாய் தூங்கணும் அதுக்காகத் தான் உன்னை சமாதானப்படுத்துறேன் என வித்தியாசமாக கொக்கிப் போட்டு அக்ஷராவை தன் பக்கம் ஈர்த்து விட்டார் ராஜு. கடைசியில் அக்ஷரா பண்ண சத்தியம் எல்.கே.ஜி பசங்க பண்ணும் சத்தியம் போல மாறிடுச்சு.


Click it and Unblock the Notifications











